Latest Specials:

More Specials

- Banned Movies Released?
- Why People Hate Rajinikanth's 'Endhiran'?
- Say No to Made in Sri Lanka - US Tamils Protest
- Over-Priced Glitterati!
- Prabhakaran Will Lead Tamil Ezham - Maaverar Day
- Original And Duplicates: Will Director's Think?
- Sameera Reddy's Hobby And Namitha's Makeover
- Refined Rahman: Behind The Tunes
- Coming This Weekend: Yogi Vs Naan Avan Illai Vs De..
- Music Review 'Paiyya' - Mix Of Genres
- Simbhu In 'Newyork Nagaram' Special Slides
- Laila's Commitment And Asin's Refusal
- Shruthi's Dedication And Reema's Trip
- Sociable Stars Change Trend Of Cinema
- Secret Behind Trisha And Sneha's Beauty
Sivajitv Special Report
Sivajitv Special Report
Dec 02,2009
தொலைபேசித் துறை காட்டிய பூச்சாண்டி!
கடந்த ஒரு வருட காலமாக நாட்டின் பாதுகாப்பு கருதி அடையாள குறியீட்டு எண் இல்லாத செல்போன்கள் தடை செய்யப்படும் இணைப்புகள் துண்டிக்கப் படும்! அவற்றில் பேச முடியாது! அதை பயன்படுத்து வது சட்ட விரோதம்! அதற்கான சட்டம் விரைவில் வரப்போகிறது என்றெல்லாம் பரபரப்பு ஓடிக்கொண்டிருந்தது.
விளைவு, மலிவு விலை போன்களான சீனா, கொரியா தயாரிப்புகளை விரட்டியடிப்பதில் பெரும் ஆர்வம் காட்டின பிற நிறுவனங்களும். சில பெரிய நிறுவனங்களின் மொபைல்களும் நன்றாக விற்க ஆரம்பித்தன.
டிசம்பர்-1 முதல் அடையாள குறியீட்டு எண் இல்லாத செல்போன் செயல் இழக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதற்கென்றே வடிவமைக்கப்பட்ட விசேஷ சாப்ட்வேர் பல்வேறு தனியார் செல்போன் சேவை நிறுவனங்களின் ஏஜெண்டுகளுக்கு வழங்கி அமல்படுத்த கேட்டு கொண்டனர். அதன்படி கடந்த 2 நாட்களாக செல்போன் வைத்திருந்த அனைவரும் தங்கள் வைத்திருக்கும் செல்போனுக்கு அடையாள குறியீட்டு எண் உள்ளதா? அது ஒரிஜினல் தானா? என்பதை சரி பார்ப்பதற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி சோதித்து வந்தனர்.
மக்களின் இந்த குழப்பத்தைப் பயன்படுத்தி, 'சிலர் எங்களிடம் ரூ.200 பணம் கட்டினால் ஐ.எம்.இ.ஐ. நம்பர் பதிவு செய்து தருவோம் என்று கடை விரித்தார்கள். அவர்களின் கடை முன்பும் நீண்ட வரிசை. அனைவரிடமும் ரூ.200 வசூலித்தனர். அத்தனையும் கடலில் கரைத்த பெருங்காயம்தான்.
இன்னொரு பக்கம், அடையாள குறியீட்டு எண்ணை சரி பார்ப்பதற்கு என்ற எஸ்.எம்.எஸ். தகவலை பரிமாறியே ஒரு மெசேஜுக்கு, ரூ.3 வீதம் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் செல்போன் சேவை நிறுவனங்களும் தாராளமாக சுருட்டின!
அரசு அறிவித்தப்படி நேற்று இரவு 12 மணி முதல் அடையாள குறியீட்டு எண் இல்லாத செல்போன்கள் செயல் இழக்கவில்லை. வழக்கம் போல் இயங்கின. எந்த ஒரு செல்போனில் இருந்தும் அடையாள குறியீட்டு எண் இல்லாத செல்போனுக்கும் அந்த செல்போனில் இருந்து மற்ற பிரபல நிறுவனங்களின் போனுக்கும் பேச முடிந்தது. இணைப்பு துண்டிக்கப்படும் என்ற அறிவிப்பு பொய்யானது.
அரசி நிறுவனமான பிஸ்என்எல் இணைப்புகள் கூட ரகசிய எண்ணில்லா மொபைல்களில் இயங்கின என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
சென்னையில் மட்டும் அடையாள குறியீட்டு எண் இல்லாத செல்போன்கள் சுமார் 16 1/2 லட்சம் மக்களின் பயன்பாட்டில் உள்ளது. எனவே செல்போன் சேவை நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை இழக்க விருப்பமில்லாமலே இருந்தன. இந்தியா முழுவ தும் 2 1/2 கோடி செல்போன்கள் இப்படி பயன்பாட்டில் உள்ளது.
இந்த நிலையில் அடையாள குறியீட்டு எண் இல்லாத செல்போன்களை தடை செய்ய முடியாததற்கு செல்போன் சேவை நிறுவனங்களில் ஏற்பட்ட குளறுபடியே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த முறை தாங்கள் செயல்படுத்திய தொழில்நுட்பம் செயலிழந்துவிட்டது உண்மைதான் என்றும், விரைவில் புதிய தொழில் நுட்பம் மூலம் ரகசிய எண்கள் இல்லாத செல்போன்களை தடை செய்துவிடுவோம் என்றும் கூறுகிறார்கள்.
பார்ப்போம்!
-சிவாஜி டிவி ஸ்பெஷல்

Post Your Comments