கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல் நடிக்கும் அடுத்த படத்துக்கு தலைப்பு.. யாவரும் கேளிர். த்ரிஷாதான் நாயகி என்கிறார்கள். ஆனால் கடைசி நேரத்தில் ஹீரோயின் மாறக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இந்தப் படத்துக்காக கமலுக்கு ரூ 25 கோடி தரப்பட்டதாக சிலர் இஷ்டத்துக்கும் அடித்துவிட்டிருந்தார்கள்.
விசாரித்ததில் கமலுக்கு 13 கோடி வரை சம்பளம் தர உதயநிதி ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இதுவும் கூட இன்னும் முடிவாகவில்லை.
இந்தப் படத்தை 90 நாள்களில் முடித்துவிட்டு, தனது கனவுப் படைப்பான மர்மயோகியை கையிலெடுக்கிறாராம் கமல். இதை இயக்குபவர் கவுதம் மேனன்.
-புலிகேசி
Related Entertainment News:
கமலின் அடேங்கப்பா சம்பளம்Udhayanidhi Debuts With Kamal Haasanகமல் கருத்து... சிவசக்தி பாண்டியன் காட்டம்!