Home Tamil News Tamil Nadu News டபிள்யூ ஆர் வரதராஜன் கொல்லப்பட்டாரா...? திடுக்கிடும் உண்மைகள்
Illinois Institute Of Technology
  

Latest News:

டபிள்யூ ஆர் வரதராஜன் கொல்லப்பட்டாரா...? திடுக்கிடும் உண்மைகள்

March 04, 2010 21:38:52

தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டபிள்யூ.ஆர்.வரதராஜன் கொல்லப்பட்டிருக்கலாம் என அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

டபிள்யூ.ஆர்.வரதராஜன் கடந்த மாதம் 11ந் தேதி திடீரென்று மாயமானார். அவரது உடல் போரூர் ஏரியில் இருந்து கடந்த 13 ந் தேதி மீட்கப்பட்டது. கட்சியிலிருந்து நீக்கப்பட்டது, குடும்பத் தகராறு போன்றவற்றால் ஏற்பட்ட மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என கூறப்பட்டது.

ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்த வரதராஜன் உடலை அவரது மனைவி சரஸ்வதி அடையாளம் காட்டினார். உடல் அழுகிய நிலையில் இருந்ததால் மரபணு சோதனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக செல்கள் சேகரிக்கப்பட்டு தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன.
 
கைரேகை மூலமும் வரதராஜன் உடல் நிரூபணம் ஆகி இருப்பதாக புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் தெரிவித்தார். வரதராஜன் உடல் என்பது உறுதியானதும் மார்க்சிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அவரது மரண செய்தியை அறிவித்தார். இதையடுத்து இறுதி சடங்குகள் நடந்தன. 

ஆனால் தற்போது டபிள்யூ.ஆர்.வரதராஜனின் மரணத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை. கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை செய்ததற்கான முக்கிய ஆதாரமாக இருப்பது தெரிய வந்துள்ளது. 


அந்த அறிக்கையில் அவரது கழுத்து இருபுறமும், கயிற்றாலோ அல்லது ஆயுதத்தாலோ நெறிக்கப்பட்டு, அதன் காரணமாக மூச்சுக்குழல் அடைக்கப்பட்டு உயிர் பிரிந்திருப்பதாக பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

என்.வரதராஜனுக்குப் பிறகு மாநில செயலாளர் போட்டியில், முதல் இடத்தில் இருந்த டபிள்யூ.ஆர்.வரதராஜனுக்கு சொந்தக் கட்சியினராலேயே அச்சுறுத்தல் இருந்ததா? அல்லது வேறு வகையில் அவர் கொல்லப்பட்டரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையைத் துவக்கியுள்ளனர். 

Related TamilNadu News:

ஹெலிகாப்டர் விபத்தில் சந்தேகம்

Karunanidhi Questions Marxist Over Jayalalitha's Acquired Land
ராஜ சேகர ரெட்டி மறைவு - அதிர்ச்சியில் 340 பேர் மரணம்...?