பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சைக் கேட்க உலக மக்கள் ஆர்வத்துடன்
காத்திருப்பதாக, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா புகழாரம் சூட்டியுள்ளார்.
ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டின் போது மன்மோகன் சிங் ஆற்றிய உரையாடலை
வைத்து இப்படி புகழ்ந்துள்ளார் அமெரிக்க அதிபர்.
கனடா நாட்டின் தலைநகரான டொராண்டோவில் நடந்த ஜி -20 உச்சி மாநாட்டில்
பிரதமர் மன்மோகன்சிங் கலந்துகொண்டார். இந்த மாநாட்டிற்கு இடையே அமெரிக்க
அதிபர் ஒபாமாவைச் சந்தித்தார் பிரதமர். அணுசக்தி ஒப்பந்தத்திற்காக கடந்த
ஏப்ரலில் வாஷிங்டன்னில் நடந்த இரு தலைவர்களின் சந்திப்பிற்கு அடுத்ததாக
நிகழ்ந்த சந்திப்பு இது. இச்சந்திப்பின் போது தீவிரவாதத்தை ஒழிப்பது
குறித்தும், உலகப் பொருளாதாரம் குறித்தும் இரு நாட்டு தலைவர்களும்
விவாதித்தனர்.
இந்தச் சந்திப்பிற்கு முன்னதாக நிருபர்களைச் சந்தித்த ஒபாமா, 'மன்மோகன் சிங்
உரையாடும் போதெல்லாம் இந்த உலகமே அவருடைய பேச்சை உற்று கவனிக்கிறது'
என்றார். மேலும் அவர் கூறுகையில்,
'என் இனிய நண்பரான மன்மோகன் சிங், ஒரு தலைசிறந்த தலைவர் . சிரமமான
சூழ்நிலைகளில் அமெரிக்காவிற்கு நல்வழி காட்டுவதில் குறிப்பிட்ட உதவியை
செய்தவர். இதை நான் ஜி -20 மாநாட்டிலேயே கூறியிருக்கிறேன். அவர்
பேசும்போது, அவருடைய உலகப் பொருளாதாரம் குறித்த ஆழ்ந்த அறிவின்
வெளிப்பாட்டை உலகம் உற்று கவனிக்கிறது.இந்தியா ஒரு சக்திமிக்க நாடாக
வளர்ந்துக் கொண்டிருப்பதை நன்றாகப் புரிந்து வைத்திருக்கும் மன்மோகன்சிங்
உலக அமைதிக்காகவும் மற்ற நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்' என்று
கூறினார் ஒபாமா.
-சிவாஜி டிவி
Related International News:
Protesters at G-20 summit, follows GandhiManmohan
Singh flies Canada for G-20 meet - National Tamil NewsG20
conference in Canada - Online Tamil News