Home Tamil News Sports News ஆஸி ஓபன் டென்னிஸ்: பட்டம் வென்றார் செரீனா வில்லியம்ஸ்


Illinois Institute Of Technology

Latest News:

ஆஸி ஓபன் டென்னிஸ்: பட்டம் வென்றார் செரீனா வில்லியம்ஸ்

January 30, 2010 21:54:05


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் செரீனா வில்லியம்ஸ். 

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடக்கிறது. 
 
இன்று நடந்த பெண்களுக்கான இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான செரீனா வில்லியம்சும், ஜஸ்டின் ஹெனினும் மோதினார்கள். 

இப்போட்டியில் செரீனா முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வென்றார். 2வது செட்டை ஹெனின் 6-3 என்ற கணக்கில் வென்றார். இதனால் கடைசி செட்டை கைப்பற்ற இருவரும் போராடினார்கள். கடைசியில் செரீனா 6-2 என்ற கணக்கில் வென்று சாம்பியம் பட்டம் வென்றார்.
 
செரீனா கைப்பற்றிய 12-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 5-வது முறையாக அவர் கைப்பற்றியுள்ளார். இந்த வெற்றியை பெற செரீனா 2 மணி நேரம் 7 நிமிடங்கள் போராட வேண்டியிருந்தது
 
நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரை இறுதியில் உலகின் முதல் நிலை வீரரான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-2, 6-3, 6-2 என்ற நேர்செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் வில்பிரட் கோங்காவை வீழ்த்தினார்.
 
பெடரர் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆண்டி முர்ரேயை எதிர் கொள்கிறார். இந்த ஆட்டம் நாளை (31-ந்தேதி) நடக்கிறது. 
 

Related Sports News:



Tennis Stars Ramp Walk For Launch Of Grey Goose

Spectacular Opening Ceremony Of Beijing Olympics

Splendid Sushil brings home a bronze medal