சென்னை: நேற்றும் இன்றும் வருமான வரித் துறை சோதனைக்கு உள்ளான நடிகர்கள் ரூபாய் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருந்ததாக நம்பகமான தகவல் வந்ததால் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
இந்த ரெய்டுக்கு உள்ளான அனைவருமே நடிகர் சூர்யாவுக்கு நெருக்கமானவர்கள், அவருடன் இணைந்து படங்களில் பணியாற்றியவர்கள்.குறிப்பாக ஆதவன் படத்தில் சூர்யாவுடன் இணைந்தவர்கள் கேஎஸ் ரவிக்குமார் மற்றும் வடிவேலு.
அகரம் பவுண்டேஷன்-சக்தி மசாலா இணைந்து மாணவர்கள் கல்விக்காக ரூ 1 கோடி திட்டத்தை பொங்கல் அன்று விஜய் டிவியில் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். இந்த அறிவிப்பு வெளியாகி 4 நாட்களுக்குப் பின் வருமான வரி சோதனை நடந்துள்ளது.
இதுகுறித்து வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
"திரையுலக பிரமுகர்கள் சிலர் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதாக எங்களுக்கு, நம்பகமான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. மேலும் தொழிலதிபர்களின் கறுப்புப் பணத்தை அறக்கட்டளைகள் என்ற பெயரில் வெள்ளையாக்கும் முயற்சியும் நடப்பதாகத் தெரிகிறது.
இதில் சூர்யா, வடிவேலு, ரவிக்குமார், முருகதாஸ் மற்றும் ஒரு பைனான்சியர் வீடு, அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டோம். வருமான வரித்துறை உதவி இயக்குனர்கள் இரண்டு பேர் தலைமையிலான குழுவினர், இந்த சோதனையை நடத்தினர்.
ஆதவன் திரைப்படத்துக்கும், இந்த சோதனைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எந்தத் தனி மனிதரையும் குறிவைத்து ரெய்டு நடத்தப்படவில்லை. எங்களுக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் மட்டுமே நடத்தப்பட்டது. சோதனைக்கு உள்ளான அனைவருமே நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர்.
ரெய்டு நடந்த இடங்களில் இருந்து ரொக்கம், நகைகள் மற்றும் பல கோடி ரூபாய்க்கான சொத்து ஆவணங்கள் கைப்பற்றியிருக்கிறோம். ஏராளமான முதலீட்டு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் உண்மைத்தன்மை மற்றும் வரி ஏய்ப்பு விவரங்கள் பற்றி ஆராய்ந்து வருகிறோம். இந்த சோதனை, சில இடங்களில் புதன்கிழமை வரை நீடிக்கும்" என்றனர்.
Related Entertainment News:
நடிகர்கள் சூர்யா, வடிவேலு, விஜயகுமார் வீடுகளில் அதிரடி சோதனை!!I Need Not Resign For CBI Raid: Raja
குடிநீர் வாரிய அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு