சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் திரும்பிய பக்கமெல்லாம் ஒரு விளம்பரம் கலக்கியெடுத்தது சில தினங்களாக... அது தில்லுதுர!
யார் இந்த தில்லுதுர என்று கேட்காத ஆளில்லை.
ஒருவழியாக பிரஸ் மீட் வைத்து விளக்கம் சொன்னார்கள் இந்த புராஜெக்டின் இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி.
அது வேறு ஒன்றுமில்லை... சில ஆண்டுகளுக்கு முன் புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் என்று ஒரு பரபரப்பைக் கிளப்பினார்களே... அந்த மாதிரி ஒரு விளம்பரம்தான் இந்த தில்லுதுர.
காம வேகத்தில் கண்ட இடத்தில் பாய்ந்து, 'தில்லுதுர'யாக இருந்த இளைஞன் உருக்குலைந்து ஓடாகி 'டல்லுதுர'யாகிறான். மரத்தடி மருத்துவர்கள் தொடங்கி, ஜோசியக்கார்கள் வரை ஆலோசனை கேட்கிறான். கடைசியில் நம்பிக்கை மையத்துக்கு வருகிறான். சிலபல சோதனைகளுக்குப் பிறகு தெளிந்த துரயாகி நடையைக் கட்டுகிறான் என்பதுதான் இந்த விளம்பரத்தின் கான்செப்ட். 20 நிமிட படமாக எடுத்துள்ளனர். இதற்கான செலவு ரூ 1.20 லட்சமாம்.
"புள்ளி ராஜாவை விட இன்னும் வேகமாக மக்களிடம் ரீச்சாகியிருக்கிறது தில்லுதுர" என்கிறார்கள் ஜேடி-ஜெர்ரி. உல்லாசம், விசில் படங்களை எடுத்த இரட்டை
இயக்குநர்கள்.
Related Entertainment News:
வேலூரில் 2000 குழந்தைகளுக்கு எய்ட்ஸ்
பாதிப்புஆயிரம் எயிட்ஸ் குழந்தைகளை தத்தெடுக்கும்
கமல்!எய்ட்ஸ் ஊழியர்களுக்கு சம்பளத்துடன்
விடுமுறை