Home Tamil News Tamil Nadu News போலீசார் அனுமதி மறுத்ததால் கோபத்தில் 1.5 கிமீ நடந்த விஜய்காந்த்!
Illinois Institute Of Technology
  

Latest News:

போலீசார் அனுமதி மறுத்ததால் கோபத்தில் 1.5 கிமீ நடந்த விஜய்காந்த்!

December 17, 2009 16:53:40

வந்தவாசி: முக ஸ்டாலின் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நேரத்தில் அந்தப் பகுதியில் பிரச்சாரம் செய்ய வந்த விஜய்காந்த் காரை போலீசார் விட மறுத்துவிட்டதால், அவர் கோபித்துக் கொண்டு ஒன்றரை கிமீ தூரம் நடந்தே சென்று பிரச்சாரம் செய்தார்.


வந்தவாசி தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் என். ஜனார்த்தனனை ஆதரித்து தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த் நேற்று மாலை 4.15 மணிக்கு ஆக்கூர் கிராமத்தில் தனது பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து கூழமந்தல் கிராமத்தில் பேசிவிட்டு அனப்பத்தூர் கிராமத்தில் பேச வந்த போது மழை கொட்டியது. கொட்டிய மழையிலும் குடை பிடித்து கொண்டு பிரசாரத்தை மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து மேல்நெமிலி பிரசாரத்தை முடித்த விஜயகாந்த் திரும்பூண்டி கிராமத்தில் பிரசாரம் செய்தார். அப்போது தெள்ளுர் பகுதியில் துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.

மு.க.ஸ்டாலினின் அடுத்த பிரசார இடமும், விஜயகாந்த் பிரசார இடமும் கொவளவேடு கிராமம் ஆகும். அதனால் போலீஸ் உயர் அதிகாரிகள் திரும்பூண்டி கிராமத்திற்கு சென்று விஜயகாந்த் பிரசார வேனை மடக்கி தாங்கள் இப்பகுதியிலே சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறிவிட்டார்களாம். விஜயகாந்த்தும் போலீசாரின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து சிறிது நேரம் காத்திருந்தார்.

பின்னர் தே.மு.தி.க. மாநில நிர்வாகிகள் பிரசாரம் செய்ய 3 கிராமங்கள் உள்ளது என கூறி போலீசாருடன் வாக்கு வாதம் செய்தனர். போலீசார் விஜயகாந்த் பிரசார வேனை விட மறுத்ததால் ஆவேசம் அடைந்த விஜயகாந்த் வேனிலிருந்து கீழே இறங்கி சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்தே வந்துள்ளார்.

இத்தகவலை கட்சி நிர்வாகிகள் செல்போன் மூலம் கொவளவேடு கிராமத்தில் உள்ள நிர்வாகிகளுக்கு சொல்ல அங்கிருந்த நிர்வாகிகள் மைக் மூலம் விஜயகாந்த் பிரசார வேனை போலீஸ் தடுத்து நிறுத்தியதை அறிவித்தனர். இதனால் தொண்டர்கள் மத்தியில் பரப்பரப்பும், ஆவேசம் ஏற்பட்டு அந்த பகுதிக்கு விரைந்து ஓடினார்கள்.

இதற்கிடையில் நடந்து வந்த விஜயகாந்தை கட்சி நிர்வாகிகள் கொவளவேடு பகுதியிலிருந்து காரில் அழைத்து வந்தனர். பின்னர் கொவளவேடு கிராமத்தில் சுமார் 4 நிமிடங்களில் பேசி அங்கு நடந்த விவரத்தினை கூறிவிட்டு நேரம் ஆகிவிட்டது. அடுத்த கிராமத்திற்கு செல்லுகிறேன் சொல்லிவிட்டு சென்றார்.


Related Tamil Nadu News:

மழை: பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!
விஜயகாந்தால் தனது கல்லூரிக்குக் கூட முதல்வராக முடியாது! -நெப்போலியன்
கொலை மிரட்டல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கைது!