சென்னை: தமிழகத்தில் நடந்த சட்டசபை இடைத் தேர்தலில் 81.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் வந்தவாசியில் அதிகபட்ச அளவாக 85 சதவீத வாக்குகளும், திருச்செந்தூரில் 78 சதவீத வாக்குகளும் பதிவாகின.
திமுகவில் சேருவதற்காக தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் திருச்செந்தூரிலும், திமுக உறுப்பினர் ஜெயராமன் மரணமடைந்ததால் வந்தவாசி (தனி) தொகுதியிலும் இடைத்தேர்தல் நடந்தது.
திருச்செந்தூர் தொகுதியில் 78.05 சதவீத வாக்குகளும், வந்தவாசியில் 84.8 சதவீத வாக்குகளும் பதிவாகின.
திருச்செந்தூர் தொகுதியில், வாக்குப் பதிவு முடிவடைந்ததும், பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான திருச்செந்தூரில் உள்ள ஆதித்தனார் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.
வந்தவாசி தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் வந்தவாசியில் உள்ள அரசினர் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.
வாக்கு எண்ணிக்கை 23ம் தேதி நடைபெறுகிறது. காலை 8 வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. பிற்பகல் 12 மணிக்குள் முடிவுகள் தெரிய வரும்.
Related Tamil Nadu News:
லெமன் சாதம், பிரியாணி விநியோகத்துடன் துவங்கிய இடைத்தேர்தல் வாக்குப் பதிவு!காதல் படுத்தும் பாடு... மூவரை உயிரோடு எரிக்க முயன்ற சென்னை வாலிபர்!கருணாநிதிக்கு 'தமிழ்த் தலைமகன்' விருது: கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கம் வழங்குகிறது