Home Tamil News Entertainment News என்னை கொடுமைக்காரன் போல சித்தரிப்பதா? - சிங்கமுத்து மீது வடிவேலு மானநஷ்ட வழக்கு


Illinois Institute Of Technology

Latest News:

என்னை கொடுமைக்காரன் போல சித்தரிப்பதா? - சிங்கமுத்து மீது வடிவேலு மானநஷ்ட வழக்கு

February 04, 2010 18:59:01

இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி என்னை கொடுமைக்காரன் போல சித்தரிக்கிறார் சிங்கமுத்து. எனவே அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருப்பதாக வடிவேலுவின் வழக்கறிஞர் பால்கனகராஜ் கூறியுள்ளார்.


இதுகுறித்து பால்கனகராஜ் நிருபர்களிடம் கூறுகையில், "சினிமா உலகில் வடிவேலுக்கு என்று தனி கவுரவம் உள்ளது. இதை கெடுக்கும் வகையிலும் அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் சிங்க முத்து தகவல்களை கூறி வருகிறார்.
 
எல்லோரையும் சிரிக்க வைக்கும் அவரை நரகாசுரன் என்று கூறி கொடுமைகாரன் போல சித்தரிக்கிறார். 
சிலரை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றஞ்சாட்டி கொலைகாரணாகவும் ஆக்க பார்க்கிறார்.

 
வடிவேலுதான் அவரது சொத்தை ஏமாற்றி எடுத்துக் கொண்டதாக கூறி குற்றச்சாட்டை திசை திருப்ப முயற்சிக்கிறார்.
 
வடிவேலு மீது குறைகளை கூறினால் அவர் செய்த மோசடி அமுங்கி போய் விடும் என்று கருதி மனதில் தோன்றுவதை எல்லாம் பேசி வருகிறார்.
 
அவர் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை. எல்லாமே அவதூறு குற்றச்சாட்டு. எனவே சிங்கமுத்து மீது அவதூறு வழக்கு மற்றும் மான நஷ்ட வழக்கு தொடரப்படும்.
 
இந்த இரு வழக்குகளையும் வருகிற திங்கட்கிழமை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்போகிறேன்..." என்றார்.

Related Entertainment News:

Gautam Warns Simbhu
முன்ஜாமீனுக்கு முயற்சிக்கும் சிங்கமுத்து
நடிகர் சிங்கமுத்து மீது வடிவேலு புகார்