வடிவேலுவுடன் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் சிங்கமுத்து.
இவர்மீது, ரூ 7 கோடி வரை நில மோசடி செய்ததாக நடிகர் வடிவேலு, போலீஸ்
கமிஷனர் ராஜேந்திரனிடம் நேற்று புகார் கொடுத்தார்.
வடிவேல் புகார் மனு குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கமிஷனர்
ராஜேந்திரன் உத்தரவிட்டார். நிலமோசடி தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வடிவேலுக்கு கொலை மிரட்டல்
விடுக்கப்பட்டது குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணையை முடுக்கி
விட்டுள்ளனர். வடிவேலு அளித்த புகார் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு
செய்யப்பட்டுள்ளன.
நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து மீது 506(2) (கொலை மிரட்டல்) பிரிவின் கீழ்
வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய நேற்று இரவு போலீசார்
நடவடிக்கை மேற்கொண்டனர்.
வடபழனி உதவி கமிஷனர் மனோகரன் மேற்பார் வையில் சிங்கமுத்துவை தேடி தனிப்படை
போலீசார் ராமாபுரம் அரசமர சந்திப்பு தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு
சென்றனர். ஆனால் அங்கு அவர் இல்லை.
சிங்கமுத்துவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசிய போலீசார் நடிகர்
வடிவேலு உங்கள் மீது ஒரு புகார் கொடுத்துள்ளார். அது தொடர்பாக விசாரணை
நடத்து வேண்டியுள்ளது. நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த சிங்கமுத்து, நான் செங்கல்பட்டில் "சினிமா சூட்டிங்"
கில் இருக்கிறேன். நானே போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வருகிறேன் என்று
கூறினார்.
இதை நம்பி நேற்று இரவு 12 மணி வரையிலும் சிங்க முத்துக்காக போலீசார்
காத்திருந்தனர். ஆனால் விசாரணைக்கு வராமல் சிங்கமுத்து தனது குடும்பத்துடன்
தலைமறைவாகி விட்டதாக தவல்கள் வெளியாகி உள்ளன.
அவரை தேடிப்பிடித்து கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
இதற்காக தனிப்படை போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகளில் எப்போதும் அவரைச் சுற்றி ஒரு
காமெடிப்பட்டாளமே இருக்கும். சிங்கமுத்து, போண்டா மணி, ஜெயமணி, சுப்பு
ராஜ், சிவநாராயணன், விஜயகணேஷ் ஆகியோர் இதில் முக்கியமானவர்கள்.
இவர்கள் அனைவரும் 'அண்ணே...அண்ணே...' என்று கூறிக்கொண்டு வடிவேலுவை சுற்றி
வந்தே காமெடி காட்சிகளில் ரசிக்க வைப்பார்கள். வடிவேலு அளித்துள்ள புகாரில்
தன்னுடன் நடித்த நடிகர்களே ஏமாற்றி விட்டனர் என்று கூறியிருப்பதால்
இவர்களிடம் மோசடி தொடர்பாக விவரங்களை கேட்கவும் போலீசார்
திட்டமிட்டுள்ளனர்.
Related Entertainment News:
வடிவேலு - ராஜ் குமார் உள்குத்து... பலிகடாவான கேமராமேன்!புறம்போக்கு நிலத்தைக் காட்டி வடிவேலுவிடம் ரூ 7 கோடி மோசடி செய்த நண்பர்கள்!டாப் கியரில் வடிவேலு!