பொன்சேகாவின் கைதுக்கு அமெரிக்கா கண்டனம் தெரவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
முன்னாள் ராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் கைது, இலங்கையில் போர் வெற்றிக்குப் பின்னர் பெரும் பிளவுகளுக்கு வழி ஏற்படுத்தி விடும் என அஞ்சுகிறோம்.
அமெரிக்கா தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இலங்கையின் சட்டங்களுக்கு உட்பட்ட நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.
இலங்கை அரசாங்கம், சமூகத்தில் ஏற்படும் அமைதியின்மையை போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பொன்சேகாவின் கைது நடவடிக்கை, இலங்கையின் சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இலங்கை அரசாங்கம், ஜனநாயக நெறிமுறைகளுக்கு இடம்கொடுக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கை தேவையற்ற ஒன்று" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கிரீன் கார்ட் வைத்திருப்பவர் பொன்சேகா என்பது குறிப்பிடத்தக்கது.
Related InterNational News:
U.S. Warns 100 Terrorists Infiltrated IndiaIndian Army Chief Warns To Be On Alert Against TerroristsCIA Warns India Of Possible Al Qaeda Assault