Home Tamil News National News கூட்டணி கட்சிகள் நெருக்கடி: டீஸல் விலை உயர்வு திரும்பப் பெறப்படும்?
Illinois Institute Of Technology
  

Latest News:

கூட்டணி கட்சிகள் நெருக்கடி: டீஸல் விலை உயர்வு திரும்பப் பெறப்படும்?

March 01, 2010 08:29:00

டெல்லி: கூட்டணி கட்சிகளான தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக, டீசல் விலை உயர்வு வாபஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அதுபற்றி கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய பட்ஜெட்டில் சுங்க வரி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்தது.

எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது மத்திய அரசில் அங்கம் வகிக்கும் முக்கிய கூட்டணி கட்சிகளான தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை வாபஸ் பெறும்படி மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன.

தமிழக முதல்வர் கருணாநிதி, ரெயில்வே மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோர் இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.


கருணாநிதி எழுதிய கடிதத்தில், விவசாயிகள் மற்றும் சாதாரண மக்கள் நலன் கருதி, குறைந்தபட்சம் டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறார்.

கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதால், பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு முன்வந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷகீல் அகமதுவும், இந்த பிரச்சினை குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்த தயார் என்று எற்கனவே அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில், சவுதி அரேபியா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் மன்மோகன்சிங் இன்று அதிகாலை டெல்லி திரும்புகிறார். அதன்பிறகு, பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை வாபஸ் பெறுவது குறித்து கூட்டணி கட்சிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related National News:

பெட்ரோல் - டீஸல் விலை உயர்வு விவகாரம்.. நாளை மறுதினம் அறிவிப்பு
Petrol And Diesel Cess To Continue Till 2030
Price Of Petrol Up By Rs 4 And Diesel By Rs 2