இலங்கையில் நடந்த போர் குறித்து விசாரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழு, இலங்கைப் படையினரின் போர்க் குற்றம் குறித்த விசாரணைக் குழுவாக மாறும் அறிகுறிகள் தென்படுவதாக தெரியவந்துள்ளது.
இந்த நிபுணர் குழுவுக்கு எதிராக இலங்கையில் எதிர்ப்புகள் வெளியிட்ட வேளையில் இந்தக்குழு தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளதாக பான் கீ மூன் தெரிவித்திருந்தார்.
எனினும் தற்போது படையினர் மீது போர்க் குற்றச்சாட்டை சுமத்தும் முதல் கட்ட நடவடிக்கையாக இந்தக்குழுவுக்கு அலுவலர்களாக எட்டு பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்தி நிறுவனம் அளித்துள்ள தகவல்படி, தென்னாபிரிக்காவின் ஜெசீகா நியூவேர்த் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் உயர்மட்டத்தின் அழுத்தம் அல்லது விருப்பத்தின் அடிப்படையில் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டை முன்வைத்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் தோழியான ஜெசீகா நியூவேர்த், இந்த குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டதை அடுத்து இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இதற்கிடையில், இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்சே, இந்த குழுவின் செயல்பாடுகள் தொடரும் பட்சத்தில், கம்போடியாவுக்கு ஏற்பட்ட நிலைமை இலங்கைக்கும் ஏற்படலாம் என்ற அச்சத்திலேயே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Related Srilanka News:
Pakistan and Malaysia now aligned against Sri Lanka - Latest Tamil NewsUNO
closes its Colombo office - Sri Lanka News in TamilAmerica
supports UN in Lanka Issue - Srilanka News Online