கனடாவில் இருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகை உதயன் அலுவலகம் தாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கனடா ஐக்கிய தமிழ் சம்மேளனத் தலைவர் குல செல்லத்துரை சமீபத்தில் கொழும்பு சென்றிருந்தபோது அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசியதாகவும், இச்சந்திப்புக்கு ஆதரவாக 'உதயன்' பத்திரிகையில் செய்தி வெளியானதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு திடீரென அந்த பத்திரிகை அலுவலகத்துக்கு வந்த இலங்கைத் தமிழர்கள் அங்கு தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனிடையே, 'ராஜபக்சேவை சந்தித்த செல்லத்துரை இலங்கை அரசின் முகவராக ஆகிவிட்டார். தமிழர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் இலங்கை அரசின் முயற்சியில் அவரும் விழுந்துவிட்டார்' என்று கனடா தமிழ் காங்கிரஸ் தலைவர் டேவிட் பூபாலபிள்ளை கூறியுள்ளார்.
Related InterNational News:
இந்தியா-அமெரிக்காவில் மிகப்பெரிய
தாக்குதல் நடத்த தீவிரவாதிகள சதித்திட்டம்-பரபரப்பு
ஷாரூக்கான் அலுவலகம் மீது தாக்குதல்ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல்-12 பேர்
சாவு