Home Tamil News National News தெலுங்கானாவுக்காக ராஜினாமா செய்யாத எம்எல்ஏ - எம்பிக்களை அடித்து உதையுங்கள் - சந்திரசேகரராவ்
  

Latest News:

தெலுங்கானாவுக்காக ராஜினாமா செய்யாத எம்எல்ஏ - எம்பிக்களை அடித்து உதையுங்கள் - சந்திரசேகரராவ்

January 27, 2010 19:28:27

மேடக்: தெலுங்கானா மாநிலத்தை வலியுறுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யாத எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களை அடித்து உதையுங்கள் என்று கூறியுள்ளார் தெலுங்கானா ராஷ்ட்ரி சமிதி தலைவர் சந்திரசேகர ராவ்.

ஆந்திர மாநிலம் மேதக் மாவட்டம் ராமசந்திராபுரம் பகுதியில் தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சந்திரசேகரராவ் கலந்து கொண்டு பேசியதாவது: தெலுங்கானா தனி மாநிலம் ஏற்படுத்தும் கோரிக்கைக்காக தெலுங்கானா பகுதியை சேர்ந்த காங்கிரஸ் மற்றும் அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன் மூலம் போராட்டத்தை தீவிரப்படுதத் வேண்டும். ராஜினாமா செய்யாத அமைச்சர்கள், எம்.பி.-எம்.எல்.ஏ.க்களை பொதுமக்கள் அடித்து உதைக்க வேண்டும். தனி தெலுங்கானா மாநிலம் அமைவதற்காக 220 பேர் தங்கள் உயிர்களை தியாகம் செய்துள்ளனர். அவர்களின் உயிரை விட இவர்களுக்கு பதவி பெரிதாக போய்விட்டதா? யார் ராஜினாமா செய்தாலும் தனி தெலுங்கானா அமைந்த பிறகு அவர்களை அதே இடத்தில் நிறுத்தி ஜெயிக்க வைக்கிறோம். எங்கள் கட்சிக்கு 10 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அந்த இடங்களையும் விட்டுத் தருகிறோம். எப்படியாவது தெலுங்கானா அமைவதற்கு ஆதரவு கொடுங்கள். இனியும் நாங்கள் காத்திருக்க முடியாது. தெலுங்கானாவை உடனே அமைத்துத்தரக்கோரி போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம். இந்த போராட்டத்தால் தெலுங்கானா பகுதியே பற்றி எரியும். அதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல, என்றார். ஊருக்குள் நுழைய விட மாட்டோம்.... இதற்கிடையே, தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த அனைத்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்ய வேண்டும். ராஜினாமா செய்யாத எம்.பி., எம்.எல்.ஏ.க்களை தொகுதிக்குள் நுழைய விடமாட்டோம், என்று தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் இன்று அறிவித்துள்ளனர்.

Related National News:

தெலுங்கானா எம்எல்ஏ- எம்எல்சிக்களை ராஜினாமா செய்ய வற்புறுத்தல்!
தெலுங்கானா... 13 மந்திரிகள் ராஜினாமா வாபஸ்!
தெலுங்கானா கோரி டிச 30-ல் முழு அடைப்பு!