தமிழக அரசின் புதிய சட்டசபைக் கட்டடத் திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு நடிகர்கள் ரஜினி - கமலுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அழைப்பிதழை தமிழக செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதியே நேரில் சென்று கொடுத்தார்.
தமிழக அரசின் புதிய சட்டசபைக் கட்டடத்துக்கான பணிகள் 2007-ம் ஆண்டு துவங்கின. முதல்வர் கருணாநிதியின் கனவுத் திட்டம் இந்த புதிய சட்டசபை வளாகம்.
திட்டமிட்டபடி மிகச் சிறப்பாக கட்டப்பட்டுள்ளது இந்தக் கட்டடம். வருகிற மார்ச் 3-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இந்தக் கட்டடத்தைத் திறந்து வைக்கிறார்கள். இவர்களுக்கு துணை முதல்வர் முக ஸ்டாலின் டெல்லிக்கு நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினார்.
இப்போது தலைநகர் சென்னையில் உள்ள முக்கிய பிரமுகர்களை அழைப்பதில் மும்முரமாக உள்ளது தமிழக அரசு.
முதல்வர் கருணாநிதி சார்பில் தமிழக செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி இந்த அழைப்பிதழ்களை நேரில் கொடுத்து வருகிறார்.
தமிழ் சினிமாவின் முதல்நிலை நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாஸனுக்கு திங்கள்கிழமை அழைப்பிதழ்களை வழங்கினார் பரிதி இளம்வழுதி.
Related Tamil Nadu News:
புதிய சட்டசபை கட்டிடம்... கருணாநிதிக்கு
சோனியா பாராட்டு!புதிய
சட்டசபைக் கட்டடம் திறப்பு...
சோனியாவுக்கு முக ஸ்டாலின் நேரில் அழைப்புபுதிய
சட்டசபை கட்டிடத்துக்கு வெடிகுண்டு
மிரட்டல்: நள்ளிரவில் போலீசார் சோதனை