தமிழகத்தின் புதிய சட்டசபைக் கட்டட திறப்பு விழாவுக்கு வருகை தரும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்திக்கு ரூ 24 கோடி செலவில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவர்களின் வருகையையொட்டி, சென்னையில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
விழா நடக்கும் பகுதி மத்திய படை மற்றும் மாநில போலீஸ் படையின் பொறுப்பில் எடுக்கப்பட்டு, பாதுகாப்பு கோட்டையாக மாற்றப்பட்டுள்ளது.
விழா நடக்கும் நேரமான மாலை 5 மணி முதல் 6 மணி வரை பறக்கும் ரெயில் பாதையில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா சாலையில் மாலை 4 மணிக்கு மேல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. ஸ்பென்சர் சந்திப்பில் இருந்து பல்லவன் சாலை சந்திப்பு வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும்.
"தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான சிறப்புத் திட்டம் ரூ. 24 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது" என மாநகரப் போலீஸ் கமிஷனர் டி. ராஜேந்திரன் தெரிவித்தார்.
Related Tamil Nadu News:
புதிய சட்ட சபை வளாகம்... வியக்க
வைக்கும் சிறப்புகள்!புதிய
சட்டசபை வளாகத்தை இன்று திறந்து
வைக்கிறார் பிரதமர்!புதிய
சட்டசபைக் கட்டடத்தின் சிறப்புகள்!
- தமிழக அரசு அறிக்கை