Home Tamil News National News உத்தரப்பிரதேசத்தில் ரயில்கள் மோதல், மூவர் பலி
  

Latest News:

உத்தரப்பிரதேசத்தில் ரயில்கள் மோதல், மூவர் பலி

January 16, 2010 19:49:46
தண்ட்லா: உத்தரப்பிரதேசத்தில்  கடும் பனிப்பொழிவு காரணமாக நின்றுகொண்டிருந்த ரயில் மீது மற்றொரு எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.
 
உத்தரப்பிரேதச மாநிலத்தில் தண்ட்லாவுக்கு அருகே நிட்டாவலி எனும் ரயில் நிலையத்தில் கான்பூர் நோக்கி செல்லும் ஷ்ரம் சக்தி எக்ஸ்பிரஸ் நின்று கொண்டு இருந்தது. அடுத்த தண்டவாளத்தில் வரும் ரயிலுக்கு இடம் விட்டு இந்த ரயில் நிறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. 
 
அப்போது அதே திசையில் பிவானிலிருந்து கான்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த கலிந்தி எக்ஸ்பிரஸ் கடும் பனி மூட்டத்தால் ரயில் நின்று கொண்டிருப்பது தெரியாமல் வேகமாக வந்து நின்று கொண்டிருந்த ரயிலின் பின் புறத்தில் பயங்கரமாக மோதியது.
 
நின்று கொண்டிருந்த ரயிலின் பின்புறத்திலிருந்த பெட்டியுடன் எஞ்சின் மோதியதில் அந்த பெட்டி முழுவதும் சேதம் அடைந்தது.
 
இந்த பயங்கர விபத்தில் 3 பேர் பலியானார்கள். 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இறந்தவர்களில் 2 பேர் குழந்தைகள், ஒருவர் பெண்.

கடந்த ஒரு வாரத்தில் பனி காரணமாக ஏற்படும் நான்காவது ரயில் விபத்து இது.

Related National News:

கடும் பனி மூட்டம்-மலைக்கிராமங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பனிமூடிய டெல்லி... பறக்காத விமானங்கள்!
Crane Accident Kills Worker At Airport