Home Tamil News Tamil Nadu News 'தங்க தர நிர்ணயச் சான்று' - புதிய சட்டமன்ற கட்டடத்துக்கு சர்வதேச சான்றிதழ்!
Illinois Institute Of Technology
  

Latest News:

'தங்க தர நிர்ணயச் சான்று' - புதிய சட்டமன்ற கட்டடத்துக்கு சர்வதேச சான்றிதழ்!

March 13, 2010 10:28:33

சென்னை : புதிய தலைமைச் செயலக கட்டடத்துக்கு அமெரிக்க - இந்திய கட்டட கழங்களின் தங்க தர நிர்ணயச் சான்றிதழ் கிடைத்துள்ளது.


மேலும் உலகிலேயே முதல் ஆட்சி மன்ற பசுமைக் கட்டடம் என்ற சிறப்பையும் இந்தக் கட்டடம் பெற்றுள்ளது. 

இது குறித்து, பசுமைக் கட்டட ஆலோசகராக செயல்பட்ட, 'இஎன்-3' அமைப்பின் நிர்வாகி தீபக் சத்யராம், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: 

தமிழக புதிய சட்டசபை கட்டடம், பசுமை விதிமுறைகளின் கீழ் கட்டப்பட்டுள்ளது. அகற்றப்பட்ட மரங்கள், மாற்று இடத்தில் நடப்பட்டுள்ளன. சட்டசபை கட்டடத்தில் 3.4 லட்சம் சதுர அடியில் பசும்புல்வெளிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

மேற்கூரைகளிலும், பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன.

ரீ-சைக்கிளிங் முறைப்படி தண்ணீர் பயன்படுத்தப்படும். தினமும் 2.55 லட்சம் லிட்டர் தண்ணீர் மறு சுழற்சி மூலம் கிடைக்கும். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில், மழைநீர் சேகரிப்பு திட்டமும் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. 

பாத்ரூம்களில் தண்ணீர் குறைந்த அளவே தேவைப்படும் வகையில், பிரத்யேக முறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாக தண்ணீர் தேவை 52 சதவீதம் குறையும். 

கோலம் டிசைன் பிளேட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கோலங்களில் உள்ள சிறிய புள்ளிகள் மூலம் வெளிச்சம் உட்புகும்; வெப்பம் உள்ளே வராது. 

60 சதவீத வெப்பத்தை உட்புக விடாமல் வெளியேற்றும் வகையில், கண்ணாடிகள் பதிக்கப்பட்டுள்ளன. வளாகத்தில் இயற்கையாகவே வெளிச்சம் நிறைந்திருக்கும்.

அறையில் ஆட்கள் இல்லை என்றால் ஐந்து நிமிடத்திற்குள், லைட், பேன்கள் தானாக செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளும். மின் சிக்கனத்தை கருத்தில் கொண்டு, இந்த நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 20 சதவீத எரிபொருள் தேவை குறையும். 

சென்னையின் தட்ப வெப்ப நிலையை கருத்தில் கொண்டு, உள்ளூரில் உள்ள செடிகளே கார்டன்களில் வைக்கப்படுகின்றன. இரண்டு ஆண்டுகள் வளர்ந்தபின் தண்ணீர் தேவைப்படாது. 

கட்டுமானப் பணிக்கு பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் சென்னையைச் சுற்றி 800 கி.மீ., தூரத்திற்குள் அமைந்துள்ள தொழிற்சாலைகளிலிருந்து வாங்கப்பட்டவை. 

சுகாதாரம் பேணுதல், மின், குடிநீர் சிக்கன முறை கையாளுதல் என பசுமை விதிகள்படி கட்டப்பட்டுள்ளன. 

உலகிலேயே பசுமை விதிகளின் கீழ் கட்டப்பட்ட ஆட்சி மன்ற கட்டடம் என்ற பெருமை, தமிழக புதிய சட்டசபை கட்டடத்திற்கு கிடைத்துள்ளது. 

அமெரிக்க, இந்திய பசுமை கட்டட கழகத்தின், 'தங்க தர நிர்ணயச் சான்றிதழ்' இந்த புதிய தலைமைச் செயலக - சட்டப் பேரவை கட்டட வளாகத்துக்குக் கிடைத்துள்ளது..." என்றார்.


Related Tamil Nadu News
:

புதிய சட்ட சபை வளாகம்... வியக்க வைக்கும் சிறப்புகள்!
புதிய சட்டசபை வளாகத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர்!
புதிய சட்டசபை கட்டிடம்... கருணாநிதிக்கு சோனியா பாராட்டு!