தெலுங்கானா எம்எல்ஏ- எம்எல்சிக்களை ராஜினாமா செய்ய வற்புறுத்தல்!
January 21, 2010 13:40:26
தெலுங்கானா அமைப்பது மேலும் தாமதமானால் தெலுங்கானாவின் 10மாவட்டங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் முதல் பஞ்சாயத்து தலைவர்கள் வரை அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெலுங்கானா அரசியல் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.
ஆனால் பதவிகளை ராஜினாமா செய்யாமல் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறோம் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூறியுள்ளனர்.
இதற்கு தெலுங்கானா அரசியல் கூட்டு நடவடிக்கை குழுவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராஜினாமா செய்யாவிட்டால் வெளியில் நடமாட விட மாட்டோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர் தெலுங்கானா போராட்டக் குழுவினர்.
இது தொடர்பாக அதன் தலைவர் கோதண்டராமன் கூறுகையில், "தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், பஞ்சாயத்து உறுப்பினர்கள் என அனைவரும் இன்று மாலைக்குள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவர்களை நாங்கள் தெலுங்கானா பகுதியில் இருந்து விலக்கி வைத்து விடுவோம்.
ராஜினாமா செய்யாதவர்களின் வீடுகளை முற்றுகையிடுவோம் அவர்களை வெளியில் நடமாட விடமாட்மோம்..." என்றார்.
Related National News:
தெலுங்கானா விவகாரம்: இன்று அனைத்து கட்சிக் கூட்டம்தெலுங்கானா... 13 மந்திரிகள் ராஜினாமா வாபஸ்!தெலுங்கானா கோரி டிச 30-ல் முழு அடைப்பு!