Home Tamil News Tamil Nadu News 30-ஆம் தேதி டாஸ்மாக் கடை லீவு!


Illinois Institute Of Technology

Latest News:

30-ஆம் தேதி டாஸ்மாக் கடை லீவு!

January 28, 2010 09:47:10

சென்னை: வள்ளலார் நினைவு தினத்தையொட்டி, சென்னையில் வருகிற 30 ந் தேதி (சனிக்கிழமை) அன்று டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படுகின்றன. 


இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

"தமிழ்நாடு மதுபானம் விதிகள்படி, வருகிற 30 ந் தேதி வடலூர் ராமலிங்க அடிகளார் (வள்ளலார்) நினைவு நாளினை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த  பார்'கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும்.

அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவிக்கப்படுகிறது. மீறி மதுபானம் விற்பனை செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

Related TamilNadu News:

AIADMK Led TASMAC Employees Protest On Nov 7
ஜனவரி 15ல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!
Karunanidhi Refutes Jayalalitha's Allegation