சென்னை: தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தமிழ் தலைமகன் விருது வழங்கப்பட்டது. கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் இந்த விருதினை அவருக்கு அளித்தது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை நடந்த விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் தலைமையில் நடந்த இந்த விழாவில் பாரதி தமிழ்ச் சங்கத்தின் ஆலோசகர் த ஞானசேகரன் இந்த விருதுக்கான பத்திரத்தை வாசித்து, வழங்கினார்.
தமிழறிஞர்கள், மாநில அமைச்சர்கள் பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.
விருதுக்கு நன்றி தெரிவித்த முதல்வர், கோவையில் நடக்கும் செம்மொழி மாநாட்டுக்கு அனைவரும் தவறாமல் வந்துவிட வேண்டும் என்று கோட்டுக் கொண்டார்.
இந்தியாவில் உள்ள அனைத்து தமிழ்ச் சங்கங்களுக்கும் தமிழக அரசு இனி உதவி செய்யும் என்றும் அறிவித்தார் கருணாநிதி.
Related Tamil Nadu News:
புதுப்பொலிவுடன் மெரீனா... திறந்து வைத்தார் முதல்வர்!வந்தவாசி, திருச்செந்தூரில் நாளை வாக்கு எண்ணிக்கை!லெமன் சாதம், பிரியாணி விநியோகத்துடன் துவங்கிய இடைத்தேர்தல் வாக்குப் பதிவு!