போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரிப்பில் அரசுத் தேர்வுத்துறை
அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களைப் பிடித்து
விசாரிக்க சென்னை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
பொறியியல் மற்றும் மருத்துவம் பயில நடந்த கலந்தாய்வில் கலந்துகொள்ள
விண்ணப்பித்த மாணவர்களில் 51 பேர் போலி மதிப்பெண் பட்டியல் அளித்திருந்தது
கண்டறியப்பட்டது. அந்த மாணவர்கள் சிலர் கொடுத்த தகவலை அடுத்து
திருவண்ணாமலையைச் சேர்ந்த முன்னாள் உதவித் தலைமை ஆசிரியர் திருவேங்கடம்
மற்றும் தேர்வுத் துறை இயக்குநர அலுவலகப் பணியாளர் ஏகாம்பரமும் கைது
செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக போலிச் சான்றிதழ்
தயாரிப்பில் ஈடுபட்டு, இதுவரை 500 போலிச் சான்றிதழ்களை விற்றிருக்கிறார்கள்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருவேங்கடத்தை நேற்று எழும்பூர்
மாஜீஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். திருவேங்கடத்தை 5
நாள் போலீஸ் காவலுக்கு எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதைத் தொடர்ந்து திருவேங்கடத்திடம் போலீசார் துருவி துருவி விசாரணை
செய்து வருகின்றனர். விசாரணையின் முதல் கட்டமாக சில விவரங்களை
கக்கியிருக்கிறார் திருவேங்கடம்.
அவர் கூறிய தகவலின்படி, தேர்வுத்துறை அதிகாரியான ராமச்சந்திரனுக்கும்
மற்றும் சில அதிகாரிகளுக்கும் போலிச் சான்றிதழ் தயாரிப்பில் தொடர்பு
இருப்பதாகக் கூறியுள்ள திருவேங்கடம் 'ராமச்சந்திரன் தான் போலிச் சான்றிதழ்
தயாரித்து தந்ததாகவும், அவருக்கு உதவியாக இரண்டு அதிகாரிகள் இருப்பதாகவும்'
கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து தேர்வுத்துறை அதிகாரி ராமச்சந்திரன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்ய சென்னை போலீசார் களம் இறங்கியுள்ளனர்.
-சிவாஜி டிவி
Related Tamilnadu News:
Fake Certificate Issue: police catch the accused - Latest Tamilnadu NewsTamilNadu
Fake Certificate Issue : Chennai Police send summon to Students -
Latest Tamil News
Action
on fake certificate students: Anna University VC - Latest Tamilnadu
News