சென்னை: தகுதி இல்லாத நிகர் நிலை பல்கலைக்கழகங்களின் அந்தஸ்து ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டதால், நாடு முழுவதும் மாணவர்கள் பதட்டமும் ஆதிதிரமும் அடைந்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 17 பல்கலைக்கழகங்கள் ரத்து செய்யப்பட்டது. இந்த அறிவிப்பினால் எதிர்காலம் என்னாகுமோ என்ற பீதி மாணவர்கள் இடையே ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று காலையில் ரத்து செய்யப்பட்ட பல்கலைக்கழகங்கள் முன்பாக மாணவர்கள் கூடினர்.
சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அது வன்முறையாகவும் மாறியது.
இதனால் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் மையம் முன்பாக மாணவர்கள் கூடினர். ஆவேசத்தில் அருகில் இருந்த கம்ப்யூட்டர் அறையில் தீ வைத்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. போலீசார் வந்து மாணவர்களை அப்புறப்படுத்தனர்.
இது போல் கோவை, காஞ்சிபுரம், ஸ்ரீவில்லிப்புத்தூர் உள்ளிட்ட பகுதி பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் கூடி நின்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் மத்திய அரசின் இந்த முடிவு மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அமைதி காக்குமாறும் மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.
Related Tamil Nadu News:
ஒரே நாளில் 4,15,141 பேர் பார்த்தனர்; சிவாஜி டிவி இணையதளம் சாதனை!CAT Exams Held Without Hassles On Day Twoசென்னை பல்கலையில் 15ம் தேதி அண்ணா நூற்றாண்டு விழா