Home Tamil News National News தெலுங்கானா கோரி டிச 30-ல் முழு அடைப்பு!
Illinois Institute Of Technology
  

Latest News:

தெலுங்கானா கோரி டிச 30-ல் முழு அடைப்பு!

December 29, 2009 12:00:55

ஹைத​ரா​பாத்: ஆந்​தி​ரப் பிர​தே​சத்தை பிரித்து தெலங்​கானா தனி மாநி​லத்தை உரு​வாக்க வலி​யு​றுத்தி புதன்​கி​ழமை ​(டிசம்​பர் 30) முழு அடைப்​புக்கு அழைப்​பு​வி​டுக்​கப்​பட்​டுள்​ளது.​


தெலங்​கானா மாநி​லம் தொடர்​பாக மத்​திய அர​சுக்கு நெருக்​கு​தல் அளிக்க அமைக்​கப்​பட்​டுள்ள அனைத்​துக் கட்​சி​களை உள்​ள​டக்​கிய கூட்டு நட​வ​டிக்கை குழு கூட்​டம் ஞாயிற்​றுக்​கி​ழமை இரவு நடை​பெற்​றது.​ இந்த கூட்​டத்​தில் 28,29 ஆகிய இரு நாள்​கள் போராட்​டம்,​​ பேர​ணியை நடத்​த​வும்,​​ 30-ம் தேதி பந்த் நடத்​த​வும் முடி​வெ​டுக்​கப்​பட்​டுள்ளது.​

இந்த கூட்டு நட​வ​டிக்கைக் குழு தெலங்​கானா ஆத​ரவு போராட்​டத்தைத் தீவி​ரப்​ப​டுத்​து​மாறு வேண்​டு​கோள் விடுத்​த​தால் தெலங்​கானா பிராந்​தி​யம் முழு​வ​தும் திங்​கள்​கி​ழமை போராட்​டம் தீவி​ரம் அடைந்​தது.​

தெலங்​கானா பகு​தி​யில் சந்​தி​ர​சே​கர ராவ் தலை​மை​யி​லான தெலங்கானா ராஷ்​டிர சமிதி கட்​சி​யி​னர் ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​ட​னர்.​ இவர்​க​ளு​டன் சேர்ந்து பிற கட்​சி​யி​ன​ரும் போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​னர்.​ இத​னால் மக்​க​ளின் இயல்பு வாழ்க்கை பெரி​தும் பாதிக்​கப்​பட்​டது.​ 

இதற்கி​டையே,​​ தெலங்​கானா விவ​கா​ரத்​தில் மத்​திய அர​சுக்கு தொடர்ந்து நெருக்​கு​தலை அளிக்க தெலங்​கானா பிராந்​தி​யத்​தைச் சேர்ந்த காங்​கி​ரஸ் அமைச்​சர்​கள் முடி​வெ​டுத்​துள்​ள​னர்.​

மத்​திய சட்ட அமைச்​சர் வீரப்ப மொய்லி மற்​றும் மூத்த காங்​கி​ரஸ் தலை​வர்​களை திங்​கள்​கி​ழமை சந்​தித்த அவர்​கள் தங்​க​ளது முடிவை தெரி​வித்​த​னர்.​

தெலங்​கானா மாநி​லத்தை உரு​வாக்​கு​வ​தில் உரிய கால​நிர்​ண​யத்தை மத்​திய அரசு அறி​விக்​கா​த​வரை தங்​க​ளது ராஜி​னா​மாவை வாபஸ் பெறப்​போ​வ​தில்லை என்று அவர்​கள் வீரப்ப மொய்​லி​யி​டம் உறு​தி​ப​டத் தெரி​வித்​த​னர்.​

Related National News:

ஜன 3-ல் 'சலோ ஹைதராபாத்'!- மாணவர்கள்

ஆந்திர மாநில புதிய கவர்னர் இ எஸ் எல் நரசிம்மன்!

ஜார்கண்ட் முதல்வராக ஷிபுசோரன் டிச 30-ம் தேதி பதவி ஏற்பு