Home Tamil News National News மீண்டும் பரபரப்பு கிளப்பும் ஸ்ரீராம் சேனா
  

Latest News:

மீண்டும் பரபரப்பு கிளப்பும் ஸ்ரீராம் சேனா

February 02, 2010 12:20:45
பெல்காம்: காதலர் தினம் கொண்டாட அனுமதிக்க மாட்டோம் என கர்நாடகத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் சேனா மீண்டும் பரபரப்பு கிளப்பியுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு மங்களூர் பப்புக்குள் புகுந்து  குடித்துக் கொண்டும் ஆண் நண்பர்களுடனும் இருந்த  பெண்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி பரபரப்பு கிளப்பியவர்கள்தான் இந்த ஸ்ரீராம் சேனா.

இந்த நிலையில் வருகிற 14ம் தேதி உலகெங்கும் கொண்டாடப்படும் காதலர் தினத்தை கர்நாடகத்தில் கொண்டாட அனுமதிக்க மாட்டோம் என அந்த அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தலிக் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து பெல்காமில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கல்வி நிறுவனங்கள், ஹோட்டல்கள், தியேட்டர்கள், காதலர் தினக் கொண்டாட்டத்தை ஊக்குவிக்கக் கூடாது என்று எச்சரிக்கிறோம்.

காதலில் நம்பிக்கை உள்ள, உண்மையான காதலர்கள் எங்களை அணுக வேண்டும். நாங்கள் அவர்களது பெற்றோர்களிடம் பேசி கல்யாணம் செய்து வைப்போம்..., என்றார் அதிரடியாக.

Related National News:

Valentines Day Marathon At Chennai
Top Romantic Comedy Scenes In Tamil Cinema - Valentines Day Special