கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்க செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார் அந்நாட்டு அதிபர் ராஜபக்சே.
கடந்த 26-ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ராஜபட்ச, அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.
தன்னை எதிர்த்து போட்டியிட்டவரும், ராணுவத்தின் முன்னாள் தளபதியுமான பொன்சேகாவை கைது செய்த மறுநாளே நாடாளுமன்றத்தை கலைக்கவும் உத்தரவிட்டுள்ளார். அரசு முறைப் பயணமாக ரஷியா சென்று திரும்பிய ராஜபக்சே இதற்கான உத்தரவை செவ்வாய்க்கிழமை நள்ளிரவே பிறப்பித்ததாகவும் இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்தில் முடிவடைகிறது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து அதற்கான தேர்தல் ஏப்ரல் 8-ம் தேதி நடத்தப்படலாம் எனவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனு தாக்கல்: நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் வரும் 19 முதல் 26-ம் தேதிக்குள் இருக்கலாம் எனவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
Related Srilanka News:
சரத் பொன்சேகாவைக் கைது செய்து தரதரவென இழுத்துச் சென்ற இலங்கை ராணுவ போலீஸ்!ராஜபக்சே மீண்டும் இலங்கை அதிபராகிறார்!'என்னை கொல்ல சதி..' - ஓட்டலில் முடக்கப்பட்ட பொன்சேகா