டெல்லி: பிரபாகரன் இறந்து விட்டதாக இலங்கை அரசு தெரிவித்துள்ள போதிலும், இதுவரை அதுதொடர்பான மரணச் சான்றிதழை இலங்கை அரசு இந்தியாவிடம் வழங்கவே இல்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
பிரபாகரன் மரணம் மற்றும் மரணச் சான்றிதழ் குறித்து தகவல் அறியும் சட்டத்தின் மூலம் சிபிஐக்கு தகவல் கோரப்பட்டிருந்தது.
அந்த மனுவுக்கு சிபிஐ கண்காணிப்பாளர் பி.என்.மிஸ்ரா அளித்துள்ள பதிலில்தான் இதனைத் தெரிவித்துள்ளார்.
தனது பதிலில் அவர் மேலும் கூறியிருந்ததாவது:
பிரபாகரன் இறந்ததாக தகவல் வந்ததை அடுத்து உரிய வழிகளில் இலங்கைக்கு தகவல் அனுப்பி அவருடைய இறப்பு சான்றிதழைக் கேட்டோம். இந்திய வெளியுறவு துறை மூலம் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் இதுவரை பிரபாகரன் மரண சான்றிதழை இலங்கை அரசு தரவில்லை. இதற்காக இன்று வரை காத்திருக்கிறோம். மரண சான்றிதழை பெறுவதற்கு அதற்குரிய வழிமுறைகளின்படி தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். பின்னர் பொட்டு அம்மானும் சேர்க்கப்பட்டார்.
இந்த இருவரும் பிடிபடாததால், இவர்கள் இருவரும் வழக்கிலிருந்து தனித்துப் பிரிக்கப்பட்டு தனி வழக்காக மாற்றப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மே 18ம் தேதி பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை கூறியது. இதையடுத்து வழக்கை முடிக்க மரணச் சான்றிதழைக் கோரியுள்ளோம். ஆனால் இதுவரை அதுகுறித்து இலங்கை அரசு பதிலளிக்காமல் மெளனம் சாதித்து வருகிறது" என்றார்.
Related Srilanka News:
பிரபாகரனும் முக்கிய தளபதிகளும் இருப்பை உறுதி செய்துள்ளனர்'பிரபாகரன் நிச்சயம் வருவார்!' - ஈழநாடுபிரபாகரன் பாதுகாப்பாக உள்ளார்! - விடுதலைப் புலிகள் அறிவிப்பு