Home Tamil News National News ஆந்திரா... கள்ளச்சாராயத்துக்கு 13 பேர் பலி
  

Latest News:

ஆந்திரா... கள்ளச்சாராயத்துக்கு 13 பேர் பலி

January 27, 2010 19:37:16
ஆந்திராவி்ல் கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் கடந்த 24-ந்தேதி இரவு கள்ளச்சாராயம் குடித்த 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு திடீரென வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.

உடனடியாக அவர்கள் அமலாபுரம், அம்பாதி பேட்டை ஆகிய இடங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் நேற்று முன்தினம் 7 பேர் பலியானார்கள்.

நேற்று மேலும் 5 பேர் பலியானார்கள். இதனால் சாவு எண்ணிக்கை 12 ஆனது. இந்த நிலையில் நேற்று இரவு அமலாபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் பலியானார்.

இதையடுத்து சாவு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து விட்டது. உயிருக்கு போராடும் மேலும் 25 பேர் காக்கி நாடா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related National News:

AIADMK Led TASMAC Employees Protest On Nov 7
ஜனவரி 15ல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!
Karunanidhi Refutes Jayalalitha's Allegation