Home Tamil News National News அடுத்த ஒரு மாதத்துக்கு ரயில்களின் கடைசி பெட்டியில் பயணம் செய்ய அனுமதி இல்லை!
  

Latest News:

அடுத்த ஒரு மாதத்துக்கு ரயில்களின் கடைசி பெட்டியில் பயணம் செய்ய அனுமதி இல்லை!

January 20, 2010 09:01:50

சென்னை: வட இந்தியா முழுவதும் கடும் குளிரும் உறை பனியும் வாட்டி எடுக்கிறது. பனிமூட்டம் காரணமாக பல விபத்துக்கள் நடந்து வருகின்றன.


இதனால் சென்னையிலிருந்து வட மாநிலங்களுக்குச் செல்லும் ரெயில்களின் கடைசிப் பெட்டியில் பயணிகள் ஏறுவதற்கு அனுமதி இல்லை என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

வடமாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு உள்ளது. இதனால் சாலை, ரெயில், விமானப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது. பனிமூட்டத்தால் அருகில் இருப்பவரைக்கூட காண முடியாத நிலை உள்ளது. பனிமூட்டம் காரணமாக 4 ரெயில் விபத்துகள் ஏற்பட்டு பலர் பலியானார்கள். உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டும் ஒரேநாளில் இரண்டு விபத்துகள் நடந்தன.

எனவே, பனிமூட்டத்தால் ரெயில் விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க ரெயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சமீபத்தில் டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில், டெல்லி அருகே கடும் பனிமூட்டத்தால் ஒரு ரெயில் நிலையத்தில் ஐந்தரை மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டத, என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.
 
பனிமூட்டத்தால் ஏற்பட்ட ரெயில் விபத்துகளில் கடைசிப் பெட்டியில் பயணம் செய்தவர்கள்தான் அதிகமாக இறந்துள்ளனர். அதனால் பனிக்காலம் முடியும் வரை கடைசிப் பெட்டியில் பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டாம் என்று ரெயில்வே வாரியம் உத்தரவிட்டது.

அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் கோரமண்டல், நவஜீவன், மும்பை எக்ஸ்பிரஸ், அவுரா மெயில் உள்பட 14 ரெயில்களின் கடைசிப் பெட்டி பூட்டி வைக்கப்படுகிறது.  இந்த மாதம் 31-ந் தேதி வரை இந்த தடை நீடிக்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Related National News
:

Maoists Atrocity Continues; Railway Track Blown
Ooty, Cunoor Rolls Back To Normalcy
Jayalalitha Discontent, Karunanidhi Lauds Railway Budget