Home Tamil News Sports News இந்தியாவில் கிரிக்கெட் தொடர்...அடுத்த சீஸன் ஆரம்பம்...
  

Latest News:

இந்தியாவில் கிரிக்கெட் தொடர்...அடுத்த சீஸன் ஆரம்பம்...

January 15, 2010 15:14:11
டெல்லி, ஜன.15:கிரிக்கெட் ரசிகர்களைக் குஷிப்படுத்த அடுத்த திருவிழா அறிவிப்பு வந்துவிட்டது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி ஆடும் போட்டிகள் குறித்த அட்டவணையை, சர்வதேச கிரிக்கெட் வாரியம், வெள்ளிக் கிழமையன்று வெளியிட்டுள்ளது.

இதன்படி பிப்ரவரி 6-ஆம் தேதி, நாக்பூரில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் துவங்குகிறது. 3  நாள் ஓய்வுக்குப் பிறகு, 14-ஆம் தேதி அடுத்த டெஸ்ட் கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

இதைத் தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகளும் நடைபெற உள்ளன. ஜெய்ப்பூரில் பிப்ரவரி 21-ஆம் தேதி, கான்பூரில் 24-ஆம் தேதி இரண்டாவது போட்டி மற்றும் தொடரின் இறுதி ஒருநாள் போட்டி அஹமதாபாத்தில் 27-ஆம் தேதியும் நடைபெற இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஜெய்ப்பூர், அஹமதாபாத் போட்டிகள் பகல் - இரவுப் போட்டிகளாக நடைபெற உள்ளன.

Related Sports News:

சாம்பியன் கோப்பை கிரிக்கெட்-இந்திய அணி தென்ஆப்ரிக்கா பயணம்
சாம்பியன் டிராபி இன்று தொடக்கம்-இலங்கை-தென் ஆப்ரிக்கா பலப்பரீடசை