Home Tamil News Tamil Nadu News புதிய சட்டசபை கட்டிடம்... கருணாநிதிக்கு சோனியா பாராட்டு!
Illinois Institute Of Technology
  

Latest News:

புதிய சட்டசபை கட்டிடம்... கருணாநிதிக்கு சோனியா பாராட்டு!

March 01, 2010 08:15:28

சென்னை: புதிய சட்டசபை கட்டிடம் பிரமாண்டமாக உருவாகி இருப்பதாக முதல்வர் கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.


தமிழக சட்டசபைக்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. புதிய சட்டசபை கட்டிடத்தை திட்டமிட்டபடி உரிய நாளில் திறப்பதற்காக அதற்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. தமிழக சட்டசபை, தலைமைச் செயலக வளாக திறப்பு விழாவையொட்டி வெளியிடப்பட உள்ள சிறப்பு மலருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார்.

அந்த வாழ்த்து செய்தியுடன் அனுப்பி உள்ள கடிதத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதியை மிகவும் பாராட்டி, புகழ்ந்து எழுதியுள்ளார்.

சோனியா காந்தியின் பாராட்டுரை:
 
"அன்புள்ள திரு.கருணாநிதி அவர்களுக்கு,

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான புதிய கட்டிடம் திட்டமிட்டபடி உரிய நாளில் திறந்து வைக்கப்படுவதற்கு தயாராகி உள்ளது என்பதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 

தங்களின் ஆழ்ந்த ஈடுபாடு காரணமாகவும், இந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளின் ஒவ்வொரு நிலையிலும் தாங்கள் அடிக்கடி சென்று பார்வையிட்டு, வழங்கிய ஆலோசனைகளின் பயனாகவும் இந்த கட்டிடம் பிரமாண்டமாக உருவாகி உள்ளது.

இதன் திறப்பு விழாவையொட்டி வெளிவர இருக்கும் மலருக்காக எனது வாழ்த்துச் செய்தி அனுப்பப்பட்டு உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுக்கு எனது பாராட்டுகளும், நல்வாழ்த்துகளும் உரித்தாகுக..."

-இவ்வாறு அந்தக் கடிதத்தில் சோனியாகாந்தி குறிப்பிட்டுள்ளார்.


Related Tamil Nadu News:

புதிய சட்டசபைக் கட்டடம் திறப்பு... சோனியாவுக்கு முக ஸ்டாலின் நேரில் அழைப்பு
புதிய சட்டசபை கட்டிடத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: நள்ளிரவில் போலீசார் சோதனை