வடிவேலுவை ஏமாற்றி நில மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுல்ள நடிகர் சிங்கமுத்து, முன்ஜாமீன் பெற முயற்சித்து வருகிறார்.
ரூ 7 கோடி மோசடி குறித்து வடிவேலு கொடுத்து புகார் மனு குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். நிலமோசடி தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கமுத்து மீது 506(2) (கொலை மிரட்டல்) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய நேற்று இரவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
சிங்கமுத்துவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசிய போலீசார் நடிகர் வடிவேலு உங்கள் மீது ஒரு புகார் கொடுத்துள்ளார். அது தொடர்பாக விசாரணை நடத்து வேண்டியுள்ளது. நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த சிங்கமுத்து, நான் செங்கல்பட்டில் சினிமா சூட்டிங்கில் இருக்கிறேன். நானே போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வருகிறேன் என்று கூறினார்.
இதை நம்பி நேற்று இரவு 12 மணி வரையிலும் சிங்க முத்துக்காக போலீசார் காத்திருந்தனர். ஆனால் விசாரணைக்கு வராமல் சிங்கமுத்து தனது குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டதாக தவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையே சிங்கமுத்துவின் வக்கீல் அறிவழகன் கூறும் போது, சிங்கமுத்து மீது வடிவேலு கொடுத்திருக்கும் கொலை மிரட்டல் புகாரில் உண்மையில்லை சிங்கமுத்து நிரபராதி. அவரை இந்த வழக்கில் சிக்க வைக்க வடிவேலு முயற்சிக்கிறார் என்றார்.
கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க சிங்கமுத்து முன் ஜாமீன் பெறுவதற்கும் அவர் முயற்சி செய்து வருகிறார்.
Related Entertainment News:
Tahawwur Rana Denied BailBhuvaneswari Appeals For Bailகல்லூரி அதிபர் ராஜாவுக்கு ஜமீன் மறுப்பு