Home Tamil News Entertainment News முன்ஜாமீன் கேட்டு சிங்கமுத்து மனு!
  

Latest News:

முன்ஜாமீன் கேட்டு சிங்கமுத்து மனு!

February 04, 2010 12:40:49

நில மோசடி புகார் தொடர்பாக முன் ஜாமீன் கோரி நடிகர் சிங்கமுத்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


இதுதொடர்பாக சிங்கமுத்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

நிலம் வாங்குவது தொடர்பாக ரூ.7 கோடி வரை மோசடி செய்ததாக நடிகர் வடிவேலு என் மீது புகார் அளித்துள்ளார்.

இந்த வழக்கில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை.​ நிலத்தை வாங்கவோ,​​ நிலம் வாங்குவதில் தரகராகவோ நான் செயல்படவில்லை.​ தமிழ் படங்களில் பல ஆண்டுகளாக நடித்து வந்தாலும்,​​ இதுவரை என் மீது எந்தப் புகாரும் எழுந்ததில்லை.​ முன் விரோதம் காரணமாகவே நடிகர் வடிவேலு என் மீது பொய்யானப் புகாரை அளித்துள்ளார்.

எந்தத் தவறும் செய்யாத எனக்கு இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனுவில் அவர் கோரியுள்ளார்.
இப்போதைக்கு போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக உள்ளார் சிங்கமுத்து.

Related Entertainment News:

முன்ஜாமீனுக்கு முயற்சிக்கும் சிங்கமுத்து
நடிகர் சிங்கமுத்து மீது வடிவேலு புகார்