Home Tamil News Entertainment News கேவி ஆனந்த் படத்திலிருந்து விலகினார் சிம்பு


Illinois Institute Of Technology

Latest News:

கேவி ஆனந்த் படத்திலிருந்து விலகினார் சிம்பு

February 04, 2010 14:29:15

கேவி ஆனந்த் இயக்கும் கோ படத்திலிருந்து விலகிவிட்டதாக நடிகர் சிம்பு அறிவித்துள்ளார்.


இயக்குநர் கேவி ஆனந்த்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாக அவர் நேற்று தெரிவித்தார்.

இந்தப் படத்தில் சில விஷயங்கள் தனக்கு உடன்பாடு இல்லை என்றும், இவற்றை மாற்றக் கோரியதற்காக என்மீது இயக்குநர் கோபம் கொண்டார் என்றும் கூறிய சிம்பு, "இப்போதைக்கு நான் நடிக்கும் அடுத்த படம் லிங்குசாமி இயக்கத்தில்தான். வெங்கட் பிரபு படத்திலும் நடிக்கிறேன். வாலிபன் படம் பற்றி விரைவில் அறிவிப்பு வரும்" என்றார்.

இந்த நிலையில், கேவி ஆனந்த் மற்றும் படப்பிடிப்புக் குழுவினர் கோ படப் பிடிப்புக்காக சீனா புறப்பட்டுச் சென்றனர். புது ஹீரோ யார் என்று இன்று அறிவிக்கின்றனர். 

-புலிகேசி


Related Entertainment News

Simbhu Is 'Ko'
KV Anand Shoved Karthi Out And Beckoned Simbhu In
Gautam Warns Simbhu