Home Tamil News National News சச்சினுக்கு பாரத ரத்னா... சிவசேனா பரிந்துரை!!
Illinois Institute Of Technology
  

Latest News:

சச்சினுக்கு பாரத ரத்னா... சிவசேனா பரிந்துரை!!

March 01, 2010 08:42:48

மும்பை: மும்பை நகரம் மும்பைவாசிகளுக்கே என்ற சிவசேனாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, மும்பை  இந்தியர்களுக்கு சொந்தம் என்று கூறியவர் சச்சின் டெண்டுல்கர்.

இதனால் சச்சினுக்கு கண்டனம் தெரிவித்த சிவசேனா, தற்போது அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கி கௌரவிக்கலாம் என பச்சைக் கொடி காட்டியுள்ளது.

மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவசேனா நிர்வாகத் தலைவர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் பேசுகையில், "பாரத் ரத்னா விருத பெறத் தகுதியானவர் சச்சின். கிரிக்கெட்டில் அடுத்தடுத்து சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்" என்றார்.

குவாலியரில் நடந்த தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டைச் சதம் விளாசி வரலாற்று பெருமை பெற்ற சச்சினுக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் பரிந்துரைப்போம் என்று முதல்வர் அசோக் சவான் நேற்று தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் அரசின் இந்த பரிந்துரையை ஆமோதிக்கும் விதமாக சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே இன்று கருத்துத் தெரிவித்துள்ளார்.


Related National News:


மக்களவையில் சச்சினுக்கு பாராட்டு!
சச்சின் உலக சாதனை... இந்தியா அபார வெற்றி
என் இரட்டை சத சாதனை என் நாட்டு மக்களுக்கே அர்ப்பணம்! - சச்சின்
 
Comments
  • Posted by  naresh
    2010-03-03 08:51
    god of cricket done a big record for our nation i love sachin....... i love sachin so much...... our entire nation proud.... well done my dear god..