Home Tamil News Entertainment News ஷங்கர் வெளியிட்டுள்ள எந்திரன் புதிய ஸ்டில்கள்!
Illinois Institute Of Technology
  

Latest News:

ஷங்கர் வெளியிட்டுள்ள எந்திரன் புதிய ஸ்டில்கள்!

January 04, 2010 10:11:13

எந்திரன் படத்தில் ரஜினியின் அசத்தல் ஸ்டில்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் ஷங்கர். 


மேலும் இந்தப் புதிய இணைய தளம் மூலம் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரியர்களின் பல கேள்விகளுக்கும் பதில் சொல்லப் போகிறாராம்.

இதுகுறித்து அவர் தளத்தில் இப்படி குறிப்பிட்டுள்ளார்:

"லோனாவாலாவிலிருந்து எந்திரன் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு இப்போதுதான் திரும்பியுள்ளேன். வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணிநேரமும் தொடர்ந்து எந்திரனுக்குத் தேவைப்படுகிறது. இதனால் என்னைப் பற்றி, எனது படங்கள் பற்றி, அது குறித்த சந்தேகங்கள் கேட்க விரும்பும் சினிமா விரும்பிகளுடன் பேசக் கூட நேரமில்லை. 

எனவே அவர்களுக்கு பதிலளிக்கும் ஒரு வாய்ப்பாக இந்த வலைப்பூவைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளேன். உங்கள் கேள்விகளைக் கேளுங்கள்... நேரமிருக்கும் போது பதில் தருகிறேன்..." 

வாங்க... வெப் உலகிலும் கலக்குங்க!

-புலிகேசி

Related Entertainment News:

Shankar-Behind The Screen
Shankar Production Entangled In Legal Issue
Why People Hate Rajinikanth's 'Endhiran'?