Home Tamil News Entertainment News டிவி சீரியல் இயக்குநர் சிஜே பாஸ்கர் மீது செக்ஸ் புகார்


Illinois Institute Of Technology

Latest News:

டிவி சீரியல் இயக்குநர் சிஜே பாஸ்கர் மீது செக்ஸ் புகார்

February 04, 2010 12:34:15

சின்னத் திரை உலகில் முன்னணி இயக்குநராகத் திகழும் சிஜே பாஸ்கர், தனது தொடர்களில் நடிக்கும் நடிகைகளை செக்ஸ் டார்ச்சர் செய்கிறார் என புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சிஜே பாஸ்கருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் சின்னத் திரை தயாரிப்பாளர் சங்க தலைவி நடிகை குஷ்பு.

இனி பாஸ்கர் இயக்கும் தொடர்களில் நடிப்பதில்லை என்று சின்னத் திரை கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சித்தி, அண்ணாமலை, மனைவி, பெண், அஞ்சலி, கோகுலத்தில் சீதை, சாவித்திரி போன்ற தொடர்களை இயக்கியுள்ளார் சிஜே பாஸ்கர். 

டி.வி. தொடர்களில் நடிக்கும் நடிகைகளுக்கு சி.ஜே.பாஸ்கர் செக்ஸ் தொல்லை கொடுப்பதாக புகார்கள் எழுந்தன. இது பற்றி ஆலோசிக்க சின்னத்திரை கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடந்தது.
 
சின்னத்திரை நடிகர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், எழுத்தாளர்கள் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றின் நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
 
இக்கூட்டத்தில் சி.ஜே. பாஸ்கர் தொடர்களில் இனி யாரும் நடிக்கக்கூடாது என்றும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சீரியல்கள் இயக்க அவருக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

Related Entertainment News

சின்னத்திரையை வைத்து சினிமாவை வலுப்படுத்தலாம்! -கமல்

Gauthami Back With A Soap
Director Bhagyaraj Pens For A Mega Serial