Home Tamil News National News பனிமூடிய டெல்லி... பறக்காத விமானங்கள்!
Illinois Institute Of Technology
  

Latest News:

பனிமூடிய டெல்லி... பறக்காத விமானங்கள்!

January 04, 2010 10:58:31

டெல்லி: கடும் பனிப்பொழிவு காரணமாக தலைநகர் டெல்லியில் விமானங்கள் கிளம்புவதும் தரையிறங்குவதும் தாமதமாகின்றன. புத்தாண்டான நேற்றும் இன்றும் 9 சர்வதேச விமானங்கள் மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டன. இன்று காலை கிளம்பவிருந்த அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்களும் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


பொதுவாக 300 மீட்டர் தூரம் இருக்கும்போதே தரை தெளிவாகத் தெரிய வேண்டும். ஆனால் இன்று புதன்கிழமை காலை 100 மீட்டர் அருகாமையில் கூட தரை தெளிவாகத் தெரியாததால், விமானத்தைத் தரையிறக்க பெரும் சிரமப்பட்டனர் விமானிகள். 
 
விமானங்கள் மட்டுமல்ல, ரயில் போக்குவரத்தும் இந்த பனி மூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் நிஜாமுத்தீனுக்கு வர வேண்டிய பல ரெயில்கள் சில மணி நேர தாமதமாகவே வந்து சேர்ந்தன. இதனால் அலுவலகம் செல்லும் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளானார்கள். 

மகா சங்கராந்தி வரை இந்த பருவநிலை தொடரும் என டெல்லி வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Related National News:

சென்னை விமான நிலையம் நவீனமயமாக்கம்

Fake Bomb Creates Chaos At Chennai Airport

Crane Accident Kills Worker At Airport