தமிழக மீனவர் சிங்கள கடற்படையினரால் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதா
'நாம் தமிழர்' இயக்கத்தின் நிறுவனர், தலைவர் சீமான் வேலூர் சிறையில்
அடைக்கப்பட்டிருந்தார்.சிறையில் இருந்தபோதே அவர் மீது தேசிய
பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது.
தேசிய பாதுகாப்புச் சட்டம் தொடர்பான முறையான நடவடிக்கைக்காக சீமானை சென்னை
ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் போலீசார் இன்று ஆஜர்படுத்தினர். வேலூர்
சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட சீமான் மதியம் 1
மணியளவில் மாஜிஸ்ட்ரேட் சாந்தினி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார். வருகிற
6 ஆம் தேதி வரை அவருடைய காவலை நீட்டித்து மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, சீமான் மீண்டும் வேலூர் சிறைக்கு கொண்டுபோகப்பட்டார்.
சீமான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவதை அறிந்து 'நாம் தமிழர்'
இயக்கத்தினர் நூற்றுக்கணக்கானோர் ஜார்ஜ் டவுன் பகுதியில் குவிந்ததால்
பரபரப்பு ஏற்பட்டது.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறித்து சீமான் பதிலளிக்கையில்
'தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை. இந்நிலையில் என்னை தேசிய
பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது எந்தவிதத்தில்
நியாயம்? தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் இன்றுவரை
கொல்லப்படுகிறார்கள். இதைத் தட்டிக்கேட்டால் எனக்கு சிறையா?' என்று
ஆவேசமாகக் கேள்விகள் எழுப்பினார்.
-சிவாஜி டிவி
Related Tamilnadu News:Seeman arrested under NSAChennai
Police try to arrest Seeman - Tamil Nadu News OnlinePolice
files case on Seeman