மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய வங்கி என்ற பெருமையுடைய எஸ்பிஐ, இந்த ஆண்டு மட்டும் புதிதாக 27 ஆயிரம் பேரை பணியமர்த்தத் திட்டமிட்டுள்ளது.
மேலும் புதிதாக நாடு முழுவதும் 1000 கிளைகளை திறக்கவும் முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து, பாரத ஸ்டேட் வங்கியின் துணைப் பொது மேலாளர் அனுப் பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசியது:
கிளார்க் பணிக்கு 20 முதல் 22 ஆயிரம் பேரும், அதிகாரிகள் பணிக்கு 5500 பேரும் இந்த ஆண்டு மட்டும் தேர்வு செய்ய உள்ளோம்.
கிராமப்புற செயல்பாடுகளில் கவனத்தை அதிகரிக்கும் வகையில் 2000 அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் புதிதாகவும் நியமிக்கப்படலாம்... அல்லது ஏற்கெனவே உள்ள கிளைகளிலிருந்தும் அனுப்பப்படலாம்.
குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்காவது அவர்கள் கிராமப் புறங்களில் பணியாற்றுவார்கள். கிராமப் புறங்களில் வங்கிச் சேவைகளை அதிகரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தவே இந்த ஏற்பாடு.
அவசியம் கருதி சில பணிகளுக்கு நேரடியாக பணியாளர்களை நியமிக்க உள்ளது வங்கி, என்றார்.
Related National News:
நாளை அனைத்து வங்கிகள் ஸ்டிரைக்!21 ஆயிரம் கோடி கடன் வழங்குகிறது உலக வங்கிState Bank Employees Imply Strike On August 6-7