கொழும்பு: மகிந்த ராஜபக்சே அரசு எனக்கு எதிராக தொடர்ந்து தொல்லை தந்து வருகிறது. இதை நிறுத்தாவிட்டால் அரசின் பித்தலாட்டங்களை உயிரைப் பணயம் வைத்தேனும் வெளியிடுவேன் என்று முன்னாள் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று மாலை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியது:
என்னா துன்புறுத்தும் அரசாங்க அதிகாரிகள் மேற்கொண்ட ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பான ஆவணங்கள் என்னிடம் உள்ளன. இவர்கள் தேர்தலின் போது மேற்கொண்ட முறைகேடுகள் தொடர்பான சாட்சியங்கள் என்னிடம் உள்ளன.
எனது அலுவலகத்தில் நடத்தப்படும் தேடுதல் வேட்டை, பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளமை, நெருங்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டமை போன்ற அரசின் செயல்கள், இறுதியாக எனது படுகொலையில் முடிய வாய்ப்பு உள்ளது.
எனக்கு பாதுகாப்பளித்த 90 படைவீரர்களுக்கு பதிலாக தற்போது 4 போலீஸ்காரர்கள் கைத்துப்பாக்கிகளுடன் மாத்திரம் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படைகளில் இருந்து சட்டரீதியாக வெளியேறிய 3 ஜெனரல்கள், 3 பிரிகேடியர்கள், மற்றும் 2 கேணல்கள் எனக்கு ஆதரவளித்ததாக கூறப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் சண்டேலீடர் செய்திதாளின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையில் சமபந்தப்பட்டவர்கள் என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இது பொய்யான தகவலாகும். நேற்று மாத்திரம் எனது அலுவலகத்தில் இருந்த 20 பணியாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
அத்துடன் 23 கணிணிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை யாவும் நீதிமன்ற ஆணையின்றியே இடம்பெற்றுள்ளன" என்றார் சரத் பொன்சேகா.
மேலும், தான் ஒருபோதும் நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை எனக்குறிப்பிட்ட அவர், தமது உயிரை பாதுகாப்பதற்காக மறைந்து வாழ வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தானும் தமது குடும்பத்தினரும் (மனைவி வெளிநாட்டில் படிக்கும் இரண்டு மகள்கள்ர்) நாட்டில் இருந்து வெளியேற முடியாதவாறு விமான நிலையத்தில் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
Related Srilanka News:
இலங்கை அதிபர் தேர்தல்: எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா?தமிழ் தேசிய கூட்டணி பொன் சேகாவுக்கு ஆதரவு?Raja Pakse Seeks Peace With Sarath Fonseka