Home Tamil News Sri Lanka News சரத் பொன்சேகாவைக் கைது செய்து தரதரவென இழுத்துச் சென்ற இலங்கை ராணுவ போலீஸ்!
  

Latest News:

சரத் பொன்சேகாவைக் கைது செய்து தரதரவென இழுத்துச் சென்ற இலங்கை ராணுவ போலீஸ்!

February 09, 2010 01:43:42

இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகா, இலங்கை அதிபர் ராஜபக்சேவை கொல்ல முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு ராணுவ போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட போது அவர் மிகவும் தரக்குறைவாக நடத்தப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராணுவத்தினர் அவரை தரதரவென இழுத்துச் சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இலங்கையின் ராணுவத்துக்கெதிராக செயல்பட்டமை, மகிந்த ராஜபக்சேவைக் கொல்ல முயற்சி, ராணுவப் புரட்சி முயற்சி போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தக் கைது நடந்துள்ளது.

நேற்றே பொன்சேகா கைதாவார் என்று கூறப்பட்டது. ஆனால் கைதாகவில்லை. இதனால், திங்களன்று காலை பத்திரிகையாளர்களிடம், "இலங்கை அரசு என்னைக் கைது செய்து பார்க்கட்டும்... அவர்கள் செய்த போர்க்குற்றங்களுக்கு ஆதாரமான அனைத்தையும் உலகின் முன் வைக்கத் தயாராக இருக்கிறேன். யாருக்கும் பயப்பட மாட்டேன்" என்றார். உடனே, பொன்சேகாவை கைது செய்ய மாட்டோம் என்று பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சே தெரிவித்தார். 

இப்படிச் சொன்ன சில மணி நேரங்களில் இலங்கை ராணுவ போலீசாரால் கைது செய்யப்பட்டார் பொன்சேகா. ராஜகீய மாவத்தையில் அமைந்துள்ள அலுவலகத்தில் வைத்துதான் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார். 

Related Srilanka News:

பொன்சேகாவுக்கு சந்திரிகா ஆதரவு... உறுதியாகிறது ராஜபக்சே தோல்வி!
ராஜபக்சேவைக் கொல்ல திட்டமிட்டார் பொன்சேகா! - இலங்கை அரசு
எனக்கு எதிரான துன்புறுத்தலை நிறுத்தாவிட்டால் அரசின் ரகசியங்களை வெளியிடுவேன் - பொன்சேகா