இருங்க இருங்க... உடனே 'கட்சி வேட்டிக் கரையை' மனதுக்குள் நினைத்துக் கொள்ள வேண்டும். இது நிஜமாகவே அம்மாக்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி.
தன் பிள்ளைகளை உலக அரங்குக்கு உயர்த்தி அழகு பார்த்த அம்மாக்களுக்கு செய்யப்படும் அசல் மரியாதை நிகழ்ச்சி.
ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் சார்பில் வரும் பிப்ரவரி 11-ம் தேதி புகழ்பெற்ற அம்மாக்களுக்கு சென்னை காமராஜ் அரங்கில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த நிகழ்வில், இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் தாயார் கரீமா பேகம், இயக்குநர் ஷங்கரின் தாயார் எஸ் முத்துலட்சுமி, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் தாயார் பாலசரஸ்வதி, அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் டாக்டர் பிரீதா ரெட்டியின் தாயார் சுசரிதா ரெட்டி, மார்க் லிமிடெட்டின் ஜிஆர்கே ரெட்டியின் தாயார் புஷ்பலதா, ஜிஆர்டி குழுமத்தின் ஜி ராஜேந்திரன் தாயார் மகாலட்சுமி, கோவை கங்கா மருத்துவமனையின் டாக்டர் ராஜா சபாபதியின் தாய் கனகவள்ளி சண்முகநாதன், அட்வகேட் ஜெனரல் பிஎஸ் ராமனின் தாயார் கல்பகம் ராமன், டிடி ரங்கராஜனின் தாயார் டிடி வனஜா, மாண்டலின் சீனிவாஸ் தாயார் யு காந்தம், கமலா தியேட்டர் நாகு சிதம்பரத்தின் தாயார் கமலா சிதம்பரம், டிடிகே ஹாஸ்பிடல்ஸ் டிடிகே சாந்தி ரங்கநாதன் தாயார் கமலா ராமானுஜம், டாக்டர் ரங்கபாஷ்யத்தின் தாயார் நடேசன் விட்டோபாய், நடிகர் ஜெயராமின் தாயார் தங்கம் சுப்பிரமணியம் ஆகியோருக்கு இந்த விழாவில் சிறப்பு செய்யப்படுகிறது.
இத்தகவல்களை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் முரளி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Related TamilNadu News:
சலியூட் டூ மதர்ஸ் பிரஸ் மீட்
Dadz And Momz Charity Show Exclusive PhotosDadz And Momz Charity Show Exclusive Video