இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்று இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 382 ரன்கள் எடுத்துள்ளது. சேவாக் 99 ரன்களில் அவுட்டாகி சதத்தை தவறவிட்ட நிலையில், சச்சின்
டெண்டுல்கர் 48 ஆவது சதம் அடித்தார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில்
நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி நேற்று
642 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
பின்னர் ஆடத் தொடங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 95 ரன்கள்
எடுத்தது. இன்று மூன்றாவது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து ஆடிய இந்திய அணி
தற்போது 4 விக்கெட்டுகளை இழந்து 374 ரன்களை எடுத்துள்ளது.சச்சின்
டெண்டுல்கர் 48 ஆவது சதம் அடித்தார். தற்போது அவர் 108 ரன்களுடனும்,
சுரேஷ் ரெய்னா 66 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
முன்னதாக சேவாக் 99 ரன்களிலும், முரளி விஜய் 52 ரன்களிலும் அவுட்டாகினர். பின்னர் வந்த லட்சுமணன் 29 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
Related Sports News:
No blood in my book: sachinTendulkar
biography Tendulkar Opus to have iconic player blood in it - Sports
NewsIPL-3
batting: Tendulkar in top rank