இனி டெண்டுல்கர் செய்யும் எல்லாமே சாதனைதான் என்று கூறும் அளவுக்கு அவரது அதிரடிகள் தொடர்கின்றன.
வங்க தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டெஸ்ட் போட்டியில் 13000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று சிட்டகாங், ஜோகர் அகமது சவுத்ரி மைதானத்தில் நடந்து வருகிறது. முதுகுவலி காரணமாக தோனி, முதல் டெஸ்டிங் பங்கேற்காததால் சேவக் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.
டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் சாகிப் அல் ஹசன், 'பீல்டிங்' தேர்வு செய்தார். சேவக் '50': இந்திய அணிக்கு சேவக், வழக்கம் போல் அதிரடி துவக்கம் தந்தார். ஹுசைனின் ஓவரில் மூன்று பவுண்டரி அடித்து அசத்திய சேவக், டெஸ்ட் அரங்கில் தனது 20வது அரைசதம் கடந்தார்.
முதல் விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்த நிலையில், சேவக் (52) அவுட்டானார். சச்சின் அபாரம்: மறுமுனையில் சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி துவக்க வீரர் காம்பிர் 23 ரன்களில் வெளியேறினார்.
அதிக எதிர்பார்ப்புடன் களமிறங்கிய டிராவிட் (4), ஹுசைன் பந்தில் போல்டானார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின், 30 ரன்கள் எடுத்த போது டெஸ்ட் அரங்கில் 13 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.
ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. டெண்டுல்கர் 76 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
வங்கதேசத்தின் பந்துவீச்சும் பீல்டிங்கும் சிறப்பாக இருந்தது.
Related Sports News:
30 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைத்த டெண்டுல்கர்!சசசின் 44வது சதம் விளாசல்-கோப்பையை வென்றது இந்தியாSachin's Records Are Unbeatable: Ponting