ஐ.நா.: ஐக்கிய நாடுகள் சபையின் நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் இந்திய கிரிக்கெட்டின் தன்னிகரற்ற வீரராகப் போற்றப்படும் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்.
ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட (UNEP)த்துக்கு இனி இவர்தான் தூதுவராக செயல்படுவார்.
பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரரான சச்சினை தனது திட்டத்தின் நல்லெண்ணத் தூதராக ஐநா நியமித்துள்ளது. சச்சினின் வானளாவிய புகழை நல்ல விஷயங்களுக்காகப் பயன்படுத்தும் நோக்கத்திலேயே இந்த நியமனம் என்கிறது ஐநா.
உலகளாவிய அளவில் அவருக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி சுற்றுச்சூழல் விழிப்புணர்வுத் திட்டங்களைப் பிரபலப்படுத்தவும், சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிக்கவும் யுஎன்இபி திட்டமிட்டுள்ளதாக அதன் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
Related Sports News:
சச்சினுக்கு 200 கிரிக்கெட் மட்டைகள்
பரிசு!மக்களவையில் சச்சினுக்கு
பாராட்டு!சச்சின்.. சாதனை மேல் சாதனை!