திருவனந்தபுரம்:
சபரிமலையில் மகர விளக்கு பூஜை
நேற்று மாலை வெகு சிறப்பாக
நடைபெற்றது. பொன்னம்பல மேட்டில்
பிரகாசித்த மகர ஜோதியை கண்டு
லட்சக்கணக்கான பக்தர்கள்
பக்திப் பரவசமடைந்தனர்.
மகர ஜோதியை
தரிசிக்க கடந்த 3 தினங்களுக்கு
முன்பிருந்தே சபரிமலையில்
பக்தர்கள் குவியத் தொடங்கினர்.
இதனால் சபரிமலையில் எங்கு
பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே
காட்சி அளித்தது. நேற்று மாலை
மகரவிளக்கு பூஜையின்போது
ஐயப்பனுக்கு திருவாபரணங்கள்
அணிவிக்கப்பட்டது. பந்தளம்
அரண்மனையில் இருந்து சபரிமலைக்கு
ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட
ஆபரணங்களை தந்திரி கண்டரரு
மகேஸ்வரரு, மேல்சாந்தி விஷ்ணு
நம்பூதிரி ஆகியோர் பெற்று
ஐயப்பனுக்கு அணிவித்தனர்.
திருவாபரணங்கள் பகவானின்
விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு
6.35 மணிக்கு நடை திறக்கப்பட்டு
தீபாராதனை நடைபெற்றது.
அதை தொடர்ந்து
சபரிமலையில் கூடியிருந்த
லட்சக்கணக்கான பக்தர்களின்
கண்கள் பொன்னம்பலமேட்டில்
பதிந்திருந்தது. 6.40 மணிக்கு
முதன் முறை ஜோதி காட்சி தந்தது.
அதை தொடர்ந்து 30 வினாடி இடைவெளியில்
இரண்டு முறை காட்சி தந்தது.
ஜோதி தரிசனம் நடத்திய ஆனந்தத்தில்
பக்தர்கள் மலை இறங்கினர். இனி
சபரிமலை நடை வரும் 20-ம் தேதி
காலை ஏழு மணி வரை திறந்திருக்கும்.
எனினும் 19-ம் தேதி வரை மட்டுமே
பக்தர்கள் தரிசனம் நடத்த முடியும்.
18-ம் தேதி காலை பத்து மணிக்கு
நெய்யபிஷேகம் நிறைவு பெற்றுவிடும்.
அதன் பின்னர் நெய்யபிஷேகம்
கிடையாது. 20-ம் தேதி காலை ஏழு
மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி
முன்னிலையில் நடை அடைக்கப்பட்ட
பின்னர் மாசி மாத பூஜைக்காக
பிப்.,12-ம் தேதி மாலை 5.30 மணிக்கு
மீண்டும் நடை திறக்கும் என
கோவில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
Related National News:
சபரிமலை அரவணை தயாரிப்பை நவீனப்படுத்த முடிவு
இன்று திருவண்ணாமலையில் மகா தீபம்
பத்தே நாளில் ரூ.10 கோடி வருமானம்! ஐயப்பன் மகிமை இது!!