அரவணை பிரசாதம் நவீன முறையில் தயாரிக்க 1 கோடி ரூபாய் செலவிடப்படும். சபரி்மலை சீசன் துவங்குவதற்கு முன் 25 லட்சம் அரவணை டின் தயாரிக்கப்படும் என கேரள அறநிலையத்துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமசந்திரன் தெரிவித்தார்.
முதல் முறையாக மாலை அணிந்து இருமுடி கட்டி சபரிமலை தரிசனத்திற்கு கேரள அறநிலையத்துறை அமைச்சர் கடனபள்ளி ராமசந்திரன் வந்தார். தரிசனத்தை முடித்து கொண்ட அவர் அங்கும், பம்பையிலும் பக்தர்கள் வசதிக்காக நடக்கும் பல்வேறு பணிகளை நேரி்ல் ஆய்வு செய்தார்.
பின்னர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், சபரிமலை சீசன் காலம் துவங்குவதற்கு முன் சன்னிதானத்தில் அரவணை தயாரிக்கும் நிலையம் ஒரு கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்படும். இந்நிலையத்தில் தற்போதுள்ள மூன்று கூலர்களுடன் மேலும் மூன்று கூலர்கள் அமைக்கப்படும். அரவணை தயாரிப்பில் இயந்திரம் பயன்படுத்தப்படும். சபரிமலையில் பிளாஸ்டிக் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநில அதிகாரிகளுடன் இம்மாத இறுதியில் கலந்தாலோசனை கூட்டம் நடத்தப்படும் என்றார்.